என் ஊழியத்தின் தற்போதைய கட்டம் Present Stage of My Ministry செப்டம்பர் 8, 1962 பிரான்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா 1. எழுப்புதல், அதிக களைப்பாயும் பெலவீனமாயும் இருக்கிறோம். எங்களுக்கு வழிநெடுக நிறைய ஐக்கியம், அருமையான கூட்டங்கள் இருந்தன. நாங்கள் கிழக்கு கடற் கரையில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு சென்று ஆங்காங்கு இருந்த கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துதல் கூறி னோம், அவ்வாறே மேற்கு கடற்கரையிலும் கனடா வரைக்கும் செய்தோம். வெவ்வேறு ஸ்தாபன சபைகள் - அசெம்பளீஸ் ஆஃப் காட், யுனைடட் பெந்தெகொஸ்தேயினர், தேவ சபை, ஃபோர்ஸ்கொயர் (Foursquare), இன்னும் மற்ற ஸ்தாபனங்கள் சிறந்த ஒத்துழைப்பு அளித்தன, மகத்தான கூட்டங்கள் உண்டாயிருந்தன. இன்று வெற்றி என்று அழைக்கப்படுவது போல், அது பெரிய வெற்றியாக அமைந்திருந்தது. ஒருக் கால் அநேகர் அதை 'மகத்தானது' என்று அழைக்கக் கூடும். ஆனால், நானோ, ஒரு-ஒரு-ஒரு எழுப்புதல் பிரசங்கி. தேசிய விதமாக குறிப்பிட்டால், எழுப்புதல் இப்பொழுது முடிந்து விட்டது. நாம்.... இருதயங்கள் கொழுந்து விட்டு எரிகின்ற ஒரு எழுப்புதலை நான் காண விரும்புகிறேன் - எண்ணிக் கையை சும்மா கூட்டுவதல்ல, ஆனால் எழுப்புதல். நம்முடைய கர்த்தர் அநேக அற்புதங்களைச் செய்து பிணியாளிகளை சுகமாக்கினார். அது மாத்திரமல்ல, அநேகர் இரட்சிக்கப் பட்டனர். இப்பொழுது நான் வீடு திரும்பி, சிறிது காலம் இளைப்பாறி, கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் சில வாரங்களில் ஊழியத்திற்கு மறுபடியும் செல்வேன். 2. இப்பொழுது நான் கூறப் போவது உலகம் பூராவிலு முள்ள அநேக ஜனங்களுக்கும் என் நண்பர்களுக்கும். இந்த கூடாரத்தில், நீங்களாவது, வேறு யாராவது இன்றிரவு இருக்க நேர்ந்தால், இங்க அதிக உஷ்ணமாயிருப்பதைக் காண்பீர்கள் என்று கூற விரும்புகிறேன். ஜனங்கள் உள்ளேயும், சுற்றிலும், நெருக்கிக் கொண்டும், கதவண்டையில் நின்று கொண்டும், வெளியே கார்களிலும் மற்றவிடங்களிலும் உட்கார்ந்துள்ளனர். இங்கு அதிக உஷ்ணமாயுள்ளது. ஜனங்களுக்கும், எனக்கும் கூட, கடினமாயுள்ளது. 3. கர்த்தர் எனக்கு அளித்துள்ள இந்த ஊழியத்தின்படி, நாம் எந்த காலத்தின் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம் என்று விவரிக்கவே இந்த இடத்திற்கு நான் வந்திருக்கிறேன். இதை நான் இந்த கூடாரத்தில் ஒலிப்பதிவு செய்ய விரும்புகிறேன். சென்ற வசந்த காலத்தின் போது அது என் இருதயத்தில் தோன்றினது. ஆனால் இதை ஒலிப் பதிவு செய்து, உலகிலுள்ள ஜனங்களுக்கு அனுப்புவதற்கென இங்கு நான் திரும்பி வரும் வரைக்கும் காத்திருந்தேன். 4. முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெபர்ஸன் வில் எய்த் அண்டு பென் தெருவிலுள்ள இந்த இடத்தில், இப்பொழுது நான் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து நூற்று ஐம்பது கெஜத் தொலைவிற்குள், அன்று காலை இந்த கூடாரத்தின் முலைக்கல்லை நான் நாட்டின போது, இது சேற்று நிலமாக இருந்தது. நான் என் இடது பாகத்திலுள்ள இடத்தில் தங்கியிருந்தேன். அது எனக்கு கலியாணமாவதற்கு முன்பு. நான் என் தகப்பனுடனும் தாயுடனும் வாழ்ந்து வந்தேன். முலைக்கல் நாட்டப்பட இருந்த அன்று விடியற் காலையில், ஏறக்குறைய ஆறு மணிக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை எழுப்பினார். நான் சிறிது நேரம் படுக்கை யில் படுத்திருந்து, என் இருதயம் மகிழ்ச்சியினால் பொங்கி, தேவனாகிய கர்த்தர் எனக்கு ஒரு கூடாரத்தைக் கொடுக்கப் போகும் அந்த மகத்தான நேரத்தைக் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் ஒரு வாலிபன். அந்த நாளில்... நான் கூட சென்று கொண்டிருந்த என் பெண் .... அடுத்த ஆண்டு என் மனைவியாக ஆனவள் - முலைக்கல் நாட்டப்பட வேண்டிய அந்த நாளில் எங்களுடன் இருப்பாள் என்று நியமிக்கப்பட்டிருந்தது. 5. அன்று காலை நான் உறக்கத்தினின்று எழுந்து அறையில் படுத்துக் கொண்டிருந்த போது - இங்குள்ள ஏழாம் தெருவில் அந்த மாடியில் - ஏதோ ஒன்று என்னிடம், "எழுந்து காலூன்றி நில்" என்றது. நான் எழுந்தேன். நான் பார்த்த போது, அது ஒரு பெரிய இடமாக இருந்தது. அந்த இடத்தில் ஒரு நதி பள்ளத்தாக்கில் ஓடிக் கொண்டிருந்தது. நான் நதியை அடைந்தேன். அது யோவான் ஸ்நானன் ஜனங் களுக்கு ஞானஸ்நானம் கொடுத்த இடமென்றும் அதை அவர்கள் பன்றிக் கூட்டத்தின் இடமாக மாற்றிவிட்டதாகவும் நான் விளங்கிக் கொண்டேன். அப்படி செய்திருக்கக் கூடா தென்று நான் கூறி, அதைக் கண்டித்தேன். 6. நான் அங்கிருந்த போது ஒரு சத்தம் என்னோடே பேசி என்னை மேலே கொண்டு சென்றது. அப்பொழுது நான் இப்பொழுதுள்ள நிலையில் இந்த கூடாரத்தைக் கண்டேன். தற்பொழுதுள்ளது போல், திரளான ஜனங்கள் கூடாரத்தில் நெருக்கிக் கொண்டிருந்தனர். நான் மிகவும் களிகூர்ந்து, பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு, தேவனே, ஒரு கூடா ரத்தை எனக்களிப்பதற்கு நீர் எவ்வளவு நல்லவர்" என்றேன். 7. அப்பொழுது கர்த்தருடைய தூதன் என்னோடே பேசி, "இது உன்னுடைய கூடாரமல்ல என்றார். நான், அப்படியானால், கர்த்தாவே, என் கூடாரம் எங்கே? " என்று கேட்டேன். 8. அவர் என்னை ஆவியில் கொண்டு போய் ஒரு சோலை யில் நிறுத்தினார். அந்த சோலை நெடுக மரங்கள் வரிசையாக இருந்தன. அவை ஒரே மட்டமாக இருப்பது அல்லது முப்பது அடி உயரம் இருந்தன. அவை கனி கொடுக்கும் மரங்களைப் போல் காணப்பட்டன. அவை பெரிய பச்சை தொட்டிகளில் நடப்பட்டிருந்தன. 9. என் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும், ஒரு காலி தொட்டி வீதம் இருபுறங்களிலும் இருப்பதைக் கவனித் * தேன். நான், இவைகளைக் குறித்து என்ன?" என்று கேட்டேன். 10. அவர், "இவைகளில் நீ நடவேண்டும்" என்றார். என் வலது பக்கத்திலிருந்த மரத்திலிருந்து ஒரு கிளையை முறித்து வலது பக்கத்திலிருந்த தொட்டியிலும், இடது பக்கத்திலிருந்த மரத்திலிருந்து ஒரு கிளையை முறித்து இடது பக்கத்திலிருந்த தொட்டியிலும் நட்டேன். இவை வேகமாக ஆகாயம் வரைக்கும் உயரமாக வளர்ந்தன. 11. அவர், "உன் கைகளை நீட்டி அவைகளிலுள்ள பழங்களைப் பறி" என்றார். ஒரு கையில் நன்கு முதிர்ந்து கனிந்த மஞ்சள் நிற ஆப்பிள் பழமும், மற்ற கையில் நன்கு முதிர்ந்து கனிந்த 'ப்ளம்' (plum) பழமும் விழுந்தன. அவர், "பழங்களைப் புசி, அவை இனிப்பானவை' என்றார். நான் இரு கரங்களிலுள்ள பழங்களையும் புசித்த போது. அவை மிக ருசியாயிருந்தன. அந்த தரிசனம் உங்களுக்குத் தெரியும். அது "வாழ்க்கை வரலாறு' அல்லது "தீர்க்கதரிசி ஆப்பிரிக் காவுக்கு விஜயம் செய்தல்" என்னும் இரு புத்தகங்களில் ஒன்றில் எழுதப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். 12. அப்பொழுது நான் கரங்களையுயர்த்தி, தேவனுடைய மகத்துவத்தை சத்தமிட்டு ஸ்தோத்தரித்தேன். அப்பொழுது திடீரென்று அந்த அக்கினி ஸ்தம்பம் அந்த மரங்களின் உச்சி யில் இறங்கி வந்தது; இடி முழங்கி, மின்னல் அடித்து, பலத்த காற்று அடித்தது. அப்பொழுது இலைகள் மரங்களிலிருந்து உதிர்ந்தன. நான் கீழே நோக்கின போது, இந்த கூடாரம் இப்பொழுதுள்ள வடிவில் இங்கு நின்று கொண்டிருந்தது. ஒரு முனையில் பிரசங்க பீடம் இருக்க வேண்டிய இடத்தில், மூன்று மரங்கள் காணப்பட்டன. இந்த மூன்று மரங்களும் மூன்று சிலுவைகள் வடிவில் அமைந்திருந்தன.... நான் பார்த்த போது, 'ப்ளம்' பழங்களும் ஆப்பிள் பழங்களும் நடுவி லுள்ள சிலுவை மரத்தில் கொத்து கொத்தாக தொங்கிக் கொண்டிருந்தன. நான் உரக்க சத்தமிட்டுக் கொண்டே வேக மாக ஓடி இந்த சிலுவையின் மேல் - இல்லை, சிலுவை யினருகில் - விழுந்து என் கைகளால் அதை அணைத்துக் கொண்டேன். அப்பொழுது காற்று அடித்து குலுக்கினது. சிலுவை மரத்தில் இருந்த பழங்கள் உதிர்ந்து என் மேல் விழுந்தன. நான் மிகவும் களிகூர்ந்தேன். அப்பொழுது அவர் "இதன் கனிகளைப் புசி, அவை மிக இனிப்பானவை" என்றார். 13. அப்பொழுது வட்ட வடிவமான ஒளி, "அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்" என்றுரைத்தது. அவர், "நீ தரிசனத்தை விட்டு வெளியேறி, உன் சுயநினைவுக்கு வரும் போது, 2 தீமோத்தேயு 4ம் அதிகாரத்தை படி' என்றார். நான் சுயநினைவை அடைந்தேன். அங்கு நான் நின்று கொண்டு, என் முகத்தையும் கையையும் தேய்த்துப் பார்த்தேன். அப்பொழுது அறையின் மூலையில் சூரிய வெளிச்சம் பிரகா சித்துக் கொண்டிருந்தது. அப்படியானால் நான், இந்த தரிசனத்தின் கீழ் சில மணி நேரங்கள் இருந்திருக்க வேண்டும். அவர், -2 தீமோத்தேயு 4ம் அதிகாரம்" என்றார். நான் வேகமாக என் வேதாகமத்தை எடுத்து 2 தீமோத்தேயு 4ம் அதிகாரத்தைப் படித்தேன். 14. இப்பொழுது அதை படிக்க விரும்புகிறேன். நான் 2 தீமோத்தேயு 4ம் அதிகாரத்தை படிக்கும் போது, ஒரு குறிப்பிட்ட வசனத்தில் நிறுத்தி விடுவது மிகவும் வினோத மான செயலாகக் காணப்படுகிறது. நான் எத்தனையோ முறை இதன் பேரில் இந்த கூடாரத்தில் பிரசங்கம் செய்திருக் கிறேன். ஆனால் எப்பொழுதுமே அத்துடன் நிறுத்திக் கொள் வது வினோதமான செயலே. இப்பொழுது 2 தீமோத்தேயு 4ம் அதிகாரம், முதல் ஐந்து வசனங்கள். ஐந்து என்பது 'கிருபை' யின் எண். இப்பொழுது படிக்கிறேன். ' நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக் கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப் போகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ் யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதை யாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; எல்லா நீடீய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்து கொண்டு, புத்தி சொல்லு. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதே சத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ள வர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகுங்காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு , தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. 2 தீமோ . 4 :1 - 5  15. நீங்கள் கவனித்தீர்களா, நானும் கூட சென்ற மே மாதம் வரை கவனிக்கவில்லை - அதாவது இதற்கு பிறகு வேறு வசனங்களை நான் இந்த அதிகாரத்தில் வாசித்ததேயில்லை என்று. இந்த வசனங்களை மாத்திரமே நான் எப்பொழுதும் படித்திருக்கிறேன், அது போதுமானது என்பது போல் காணப்படுகிறது. ஏனெனில் இந்த வேதபாகம், நான் வார்த்தையை பிரசங்கம் பண்ண வேண்டுமென்றும், தீங்கனு பவிக்க வேண்டுமென்றும், நீடிய சாந்தத்துடன் இருக்க வேண்டுமென்றும் என்னிடம் உரைக்கிறது. ஏனெனில் அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மன தில்லாமல் செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி. கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகும் காலம் வரும். நான் சுவிசேஷகன் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. சுவிசேஷ கனுடைய வேலையைச் செய்" என்று தான் கூறினார் - பவுல் தீமோத்தேயுவுக்கு கூறுகிறான் , பாருங்கள்? அது என்ன கூறுகிற தென்று கவனித்தீர்களா? அவர், "நீ சுவிசேஷகனாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறாய்" என்று கூறவில்லை. சுவிசேஷ கனுடைய வேலையைச் செய்" என்று தான் கூறினார். பாருங்கள்? இப்பொழுது, நாம் அங்கு காண்பது என்னவெனில், அது பிழையின்றி ஒவ்வொரு எழுத்தும் நிறைவேறினதென்று என் முழு இருதயத்தோடும், என் அறிவுக்கு எட்டின வரைக்கும் என்னால் கூற முடியும். 16. எனக்குத் தெரிந்த வரைக்கும், ஒன்றைத் தவிர அவர் எனக்களித்த மற்ற தரிசனங்கள் அனைத்தும் நிறைவேறி விட்டன. என் ஊழியத்தில் ஒரு மாற்றம் உண்டாகி, ஒரு கூடாரம், அல்லது ஒரு பெரிய அரங்கம், அப்படி ஏதோ ஒன்று காணப்பட்ட ஒரு இடத்திலுள்ள ஒரு சிறு அறையில் வியாதியஸ்தர்களுக்காக நான் ஜெபிக்கும் தரிசனம் ஒன்று மாத்திரமே நிறைவேறவில்லை. அது எனக்கு ஒரு கூடாரம் போல் காணப்பட்டது. இரண்டு அல்லது மூன்று ஆண்டு களுக்கு முன்பு நான் கண்ட தரிசனம் உங்களுக்கு நினைவில் உள்ளதா? பெரும்பாலான மற்ற தரிசனங்கள் நிறைவேறி விட்டன. நான் மெக்ஸிகோவுக்குச் சென்று அன்றிரவு எவ்வாறு மழை பெய்யுமென்றும்; அங்கு என்ன நடக்கு மென்றும். அவர் என்னிடம் என் முதலாம் இழுப்பு ஊழி யத்தைக் குறித்துக் கூறினார். நான் மிகச் சிறிய மீனைப் பிடிக்க முயன்று அது தவறி விட்டது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? இரண்டாவது, ஒரு சிறு மீனாக இருந்தது. அவர் என்னிடம், "மூன்றாம் இழுப்பின் போது தவறாதே. . ஜனங்களிடம் சொல்லாதே" என்றார். நான் என்ன செய்கிறேன் என்பதை எப்பொழுதும் ஜனங்களுக்கு விளக்குவது வழக்கம். ஆனால் நான் செய்வதை ஜனங்களிடம் சொல்லக் கூடாதென்று என்னை எச்சரித்தார். அவர் என்னிடம் செய்யக் கூறுவதை செய்து விட்டு, அப்படியே விட்டு விட வேண்டும். பாருங்கள்? 17. நான் எப்படிப்பட்டவன் என்றால், எனக்கு இரக சியமே கிடையாது. எனவே எனக்குத் தெரிந்த எல்லா வற்றையும் நான் கூறிவிடுகிறேன். அது என் இயல்பு என்று நினைக்கிறேன். ஆனால், நான் முயல்வது .... நான் ஜனங்களை நேசிக்கிறேன், அவர்கள் எப்படியாயினும் இரட்சிக்கப்பட வேண்டும் என்நு நான் அதிக ஆவல் கொண்டுள்ளதால், அவர்கள் எதையும் அறிந்து கொள்ள தவறக் கூடாது என்பதற்காக நான் எல்லாவற்றையும் கூறி விடுகிறேன் - அவர் ஏதாவதொன்றை கூற வேண்டாம் என்று என்னிடம் குறிப்பாக கூறினாலொழிய . பாருங்கள்? அதில் தவறு இல்லை யென்று அவர்கள் சந்தேகமின்றி அறிந்து கொள்ள வேண்டு மென்று நான் விரும்புகிறேன். 18. இப்பொழுது, அது அப்படியே நிறைவேறினது. ஞாபகம் கொள்ளுங்கள், நாம் ஒரு நிமிடம் அதை படிப்போ மானால், கட்டளை என்னவென்றால், "நான் தேவனுக்கு முன்பா கவும், அவருடைய ராஜ்யத்தில் அவர் பிரசன்னமாகும் போது உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந் திர்க்கப் போகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பா கவும்.' பாருங்கள்? "நியாயாதிபதி... தேவனுக்கும் கிறிஸ்து வுக்கும் முன்பாகவும் கட்டளையிடுகிறதாவது: திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு." எனவே எனக்குதவி செய்வீராக, இன்றிரவு வரைக்கும், எனக்குத் தெரிந்தமட்டில், நான் திருவ சனத்தைத் தவிர வேறெதையும் பிரசங்கித்ததில்லை, பாருங்கள். அதில் நான் முற்றிலுமாக நிலைத்து வந்திருக் கிறேன். அது எனக்கு அதிக தொல்லை விளைவித்துள்ளது. "திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு" என்பதன் காரணமாக நான் அதிக துன்பங்களையும் போராட்டங்களையும் அனுபவித் திருக்கிறேன் அநேக அருமையான நண்பர்கள் இதன் நிமித்தம் என்னை விட்டுப் பிரிந்து போயினர். '19. உங்களுக்கு ஞாபகமுள்ளதா, அண்மையில் எனக்குக் கிடைத்த அந்த தரிசனத்தில் - அதை சிறு மறுரூபப்படுதல் என்று அழைக்க விரும்புகிறேன் - நான் மேலே எடுக்கப்பட்டு லட்சக்கணக்கான ஜனங்களைக் கண்டு, நான் திரும்பிப் பார்த்த போது, என் உடலைக் கீழே கண்டேன். நான் இயேசுவைக் காண விரும்புகிறேன்' என்றேன். 'அவர் இன்னும் உயரத்தில் இருக்கிறார்" என்றார். 20. நல்லது, பாருங்கள், ஜனங்கள் மரிக்கும் போது. அவர்கள் உடனே தேவனிடம் செல்வதில்லை. உங்களுக்கு புரியும் என்று நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். ஒருக்கால் என்னால் முடிந்த வரையில் அதை நான் உங்களுக்கு விளக்கித் தர வேண்டும். நீங்கள் அவசரமாகப் போக வேண்டுமா? நாம் நேரத்தை எடுத்துக் கொண்டு, கூடுமான வரையில் அதை தெளிவுபடுத்துவோம். 21. நாம் இவ்வுலகிற்கு வரும்போது, இங்கு மூன்று பரிமாணங்களில் வாழ்கிறோம் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அவை என்னவென்று என்னால் குறிப்பிட முடியுமா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. அவை களில் ஒன்று ஒளி, மற்றொன்று பொருள் (matter). டாமி, மூன்றாவது என்னவென்று ஞாபகமுள்ளதா? அணு காலம். சரி. இப்பொழுது; ஒளி, பொருள், காலம். நமது ஐம்புலன்கள் இந்த பரிமாணங்களுடன் தொடர்பு கொள்கின்றன. நமது பார்வை ஒளியுடன் தொடர்பு கொள் கிறது. நமது உணர்ச்சி பொருளுடன் தொடர்பு கொள் கின்றது, இப்படியாக. 22. ஆனால் விஞ்ஞானத்தின் மூலம் நாம் நான்காம் பரிமாணத்துடன் தொடர்பு கொள்கிறோம். இப்பொழுது இந்த கட்டிடத்தின் வழியாக படங்களும், வானொலி குரல் களும், தொலைக்காட்சி படங்களும் வந்து கொண்டி ருக்கின்றன. இவைகளுடன் நமது புலன்கள் தொடர்பு கொள்ள இயலவில்லை. ஆனால் அவர்களிடம் ஒரு குழாயோ அல்லது ஒரு படிகமோ உள்ளது. அது ஈதர் அலைகளை கிரகித்துக் கொண்டு அவைகளைக் காண்பிக்கிறது. எனவே பாருங்கள், இந்த கட்டிடத்திற்குள்ளேயே. ஜனங்கள் புரியும் செயல்களும், காற்றிலே அவர்களுடைய குரல்களும் உள்ளன. அவை இங்குள்ளன. அது நமக்குத் தெரியும். அது முற்றிலும் உண்மை. நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று; அவர்கள் அதை கிரகிக்க வைக்கின்றனர்... விஞ்ஞானம் கண்டு பிடித்த இவைகளை அவர்கள் எவ்விதம் செய்கின்றனர் என்று எனக்குப் புரிவதில்லை. ஆனால் நான்காம் பரிமாணம் ஒன்றுண்டு என்பதை அது நமக்கு நிரூபிக்கிறது. 23. பாவி, அவிசுவாசி மரித்த பிறகு போகும் இடமே ஐந்தாம் பரிமாணம். அந்த ஐந்தாம் பரிமாணம் மிகவும் பயங்கரமான பரிமாணம். இந்த மனிதன்..... ஒரு கிறிஸ்தவன் மரிக்கும் போது. அவன் ஆறாம் பரிமாணத்துக்குச் செல்கிறான். தேவன் ஏழாம் பரிமாணத்தில் இருக்கிறார். 24. அப்படியானால், பாருங்கள், கிறிஸ்தவன் மரிக்கும் போது, அவன் தேவனுடைய பலிபீடத்தின் கீழ், தேவனுடைய சமுகத்துக்குள், பலிபீடத்தின் கீழ் சென்று அங்கு இளைப் பாறுகிறான். 25. இதை தனித்தனியே பார்ப்போமானால். ஒரு மனி தனுக்கு தீக்கனவு (nightmare) உண்டாகுமானால், அவன் முழு வதும் உறக்க நிலையில் இல்லை, அவன் விழித்துக் கொண்டி ருக்கவும் இல்லை. அவன் உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையே உள்ள நிலையில் இருக்கிறான். அது தான் அவனுக்கு பயங்கரமான நடுக்கம் ஏற்படும்படி செய்து, அவனை அலற வைக்கிறது. ஏனெனில் அவன் உறங்கிக் கொண்டிருக்க வில்லை, விழித்துக் கொண்டிருக்கிறான். அதை நாம் எடுத்துக் கொண்டால், மனம் மாற்றம் அடையாத ஒரு மனிதன் எங்கு செல்கிறான் என்பதை அது காண்பிக்கிறது. அவன் தன் காலத்தை வாழ்ந்து முடித்து விட்டு, உலகில் மரிக்கிறான். அவன் தேவனுடைய சமுகத்தில் செல்ல முடியர்து. ஏனெனில் இரத்தம் இல்லாமல் அங்கு செல்ல அவன் தகுதி யுடையவன் அல்ல. அவன் மாட்டிக் கொள்கிறான். அவனால் மறுபடியும் உலகத்திற்கு வரமுடியாது, ஏனெனில் உலகத் தில் அவனுடைய காலம் முடிந்து விட்டது. அவன் இடை யிலே மாட்டிக் கொண்டு தீக்கனவைப் பெறுகிறான். பாருங்கள்? அவன் தேவனுடைய சமுகத்துக்குச் சென்று இளைப்பாற முடியாது. அதே சமயத்தில் அவனால் உலகத் திற்கு வரவும் முடியாது. ஏனெனில் அவனுடைய காலம் முடிந்து விட்டது. அவன் தீக்கனவில் இருக்கிறான். அங்கே அவன் நியாயத்தீர்ப்பு நாள் வரைக்கும் இருக்கிறான். அதில் இருப்பது மிகவும் பயங்கரமான காரியம், பாருங்கள். 26. இந்த தரிசனத்தில், நான் அறாம் பரிமாணத்துக்கு எடுக்கப்பட்டேன் என்று நினைக்கிறேன். திரும்பிப் பார்க்கும் போது, என்னால் காண முடிந்தது. பாருங்கள், அந்த பார்வை பூமிக்குரிய கண்களினால் காணும் பார்வையல்ல. அந்த பார்வை மேலானது... அவர்களுக்கு அங்குள்ள பார்வை, நமது மாம்சப் புலன்கள் தொடர்பு கொள்வதைக் காட்டிலும் மிக அதிக தூரம் தொடர்பு கொள்ள வல்லது. 27. சில நாட்களுக்கு முன்பு அதை இங்கு விளக்கி னேன். நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் கண்டேன். அவர்கள் ஒரு மனிதனை கடலில் இரண்டு மைல் அல்லது ஒரு மைல் ஆழத்தில் இறக்கி விட்டனர். ஒளிக்கதிர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. அவர்கள் கடலில் வாழும் பிராணிகளைக் காண்பித்தனர். அப்பொழுது ஒரு மீன் வந்தது - விகாரமாகத் தோற்றமளித்த ஒன்று. அது நள்ளிரவு, அங்கு மிகவும் இருட்டாக இருந்தது. அவைகளுக்கு முக்கில் பாஸ்வரம் (phosphorus) இருந்தது, கண்கள் இல்லை. அவை இரை தின்ன வேண்டும். எனவே அவை இரை தேட வேறொரு புலன் மூலம் வழிநடத்தப்பட்டன. கண் பார்வையினால் அல்ல. ஏனெனில் அங்கு உபயோகிக்க அவைகளுக்கு கண்கள் இல்லை. தங்கள் இரையைக் கண்டுபிடிக்க, அவை வேறொரு. புலன் மூலம் வழிநடத்தப்பட்டன. "நான் மாத்திரம் என் பார்வையினால் அந்த மீனை கட்டுப்படுத்த முடியு மென்றால், அதை வெவ்வேறு இடங்களுக்கு நடத்திச் சென்று, எவ்வளவு அதிகமாக அதற்கு இரையை அளிக்க முடியும்? அது தொடர்பு கொள்ளும் ரேடாரை'க் (radar) காட்டிலும் என் பார்வை எவ்வளவு மேலானது என்று எண்ணினேன். 28. அப்பொழுது எனக்கு இது மனதில் தோன்றினது: "நான் மாத்திரம் என்னை முழுவதுமாக தேவனிடம் அர்ப் பணித்தால், தேவனுடைய பார்வையும் புலன்களும் எவ்வளவு அதிகம் சக்தி வாய்ந்தவை! நாம் காண்பவைகளைக் காட்டிலும் இன்னும் அதிகமாக நம்மை வழிநடத்தக் கூடியவர் யார்? ஏனெனில் அவர் நமக்களிக்கும் விசுவாசம் நம்முடைய கண் களினால் நாம் காணாதவைகளின் நிச்சயமாக இருக்கிறது. அந்த மீன் மற்ற மீன்களைப் போலவே மேலே வரமுடியாது. ஏனெனில் அது அழுத்தம் கொண்டுள்ளது. அதை நீங்கள் மேலே கொண்டு வந்தால், அது வெடித்து விடும் - நாம் உயர செல்லும் போது, வெடிப்பதை தடுக்க முடியாதது போல. நாம் வாழும் இடத்துக்கு ஏற்றவாறு அழுத்தம் கொண்டுள்ளோம். 29. அந்த சிறிய மீன் மாத்திரம் இங்கு வந்து என்னைப் போல ஆக நேர்ந்தால், அது மறுபடியும் அந்தகாரத்துக்கு சென்று சிறு மீனாக இருக்க விருப்பம் கொள்ளுமா? அதற்கு மறுபடியும் மீனாக இருக்க விருப்பம் இருக்காது; ஏனெனில் அது மீனைக் காட்டிலும் உயர்ந்தது, அது ஒரு மனிதன். அதன் புலன்கள் உயர்ந்தவை, . அதன் புரிந்து கொள்ளும் தன்மை மேலானது. அதன் அறிவு உன்னதமானது. அதை ஒரு கோடியில் பெருக்குங்கள், அதை தான் நீங்கள் இங்கிருந்து மேலே தேவனுடைய சமுகத்துக்கு செல்லும்போது பெறுவீர்கள். அப்பொழுது ஒரு மனிதன் இங்கிருந்ததைக் காட்டிலும் மிக உயர்ந்த நிலையை அடைவான். நீங்கள் மறுபடியும் மனிதனாக இருக்க, வியாதியும் அழிவும் நேரிடக் கூடிய பூச்சரிக்கும் இந்த சரீரத்தில் வாழ, ஒருபோதும் விரும்பமாட்டீர்கள். நான் முப்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் இந்த சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களிடம், ஆதாயமாகப் பெற்றுக் கொள்ள பரலோகம் ஒன்று உண் டென்றும், நாம் புறக்கணிக்க வேண்டிய நரகம் ஒன்று உண் டென்றும், உங்களை நேசிக்கும் தேவன் ஒருவர் இருக்கிறார் என்றும், மீட்கும் வல்லமை ஒன்று உண்டென்றும், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயுள்ள எந்த நேரத்திலும் உங்களிடம் வர அது காத்திருக்கிறது என்றும் கூறி வந்திருக்கிறேன். இதுவே - என் இருதயத்தில் இருந்து வந்திருக்கிறது. 30. தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் அங்கு ஒரு கயிறு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அந்த கயிற்றை பிடித்துக் கொண்டு என்னால் மேலே வர முடியும். ஆனால் அந்த கயிற்றைப் பெற நான் பாத்திரன் அல்ல" என்று சொல்வது போல். நீங்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்துக்காகவே அந்த கயிறு அங்கு வைக்கப் பட்டுள்ளது. பாவிகளை இரட்சிக்க வேண்டும் என்னும் நோக் கத்துக்காகவே இயேசு கிறிஸ்து மரித்தார். அவர் நித்திய ஜீவன் என்னும் கயிற்றை தொங்க விட்டிருக்கிறார். அது இன்றிரவு ஒவ்வொரு பாவியின் தலைமேலும், அதை விட்டு வெளியே வா" என்று எழுதப்பட்டுள்ள வரவேற்பு அட்டை யுடன் ஆடிக் கொண்டிருக்கிறது. அப்படி செய்ய நீங்கள் விரும்பினால், அதற்கான ஆயத்தம் செய்யப்பட்டு விட்டது. 31. அந்த இடத்தையும், இந்த உலகம் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையில் அந்த ஜனங்களையும் நான் கண்ட போது, அது மிகவும் மகிமையாயிருந்தது. அங்கு பாவம் இருக்க முடியாது, மரணமோ அல்லது வேறெதுவோ அந்த இடத்தில் நுழைய முடியாது. அங்கு ஆணுக்கும் பெண் ணுக்கும் வித்தியாசமில்லை, இனச்சுரபிகள் அவர்களை விட்டுப் போயிருந்தன. அங்கு விபசாரமோ மற்றெதுவோ இருக்க முடியாது. ஆனால் ஒரு பெண் தன் பெண் உருவத்தையும், ஒரு ஆண் தன் ஆண் உருவத்தையும் கொண்டிருந்தனர். அவர்கள் சதாகாலங்களிலும் அப்படியே இருப்பார்கள். ஏனெனில் தேவன்... 32. இதை கூறுவது நலம், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளாகிய உங்களில் சிலருக்கு ஒரு வர்க்கத்தி லிருந்து மற்றொரு வர்க்கம் உருவாவதாக (evolution) கற்பிக்கப் பட்டு வருகிறது. நானும் உருவாதலில் நம்பிக்கை கொண்ட வன், ஆனால் மனிதன் ஏதோ ஒரு தாழ்ந்த வர்க்கத்திலிருந்து உருவானதாக அவர்கள் கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் ஏதாவதொன்றை கலப்பு செய்து, அது தன்னையே உற்பத்தி செய்து கொள்ள முடியாததனால் அவர்களுடைய சொந்த கருத்துக்கு அது எதிரான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, பாருங்கள், அது அவர்களையே பின்நோக்கித் தாக்குகிறது. 33. என் கருத்து என்னவெனில், தேவன் இந்த பூமியை தண்ணீரினால் குளிப்பாட்டினபோது, அதிலிருந்து முதலில் தோன்றினது 'ஜெல்லி' மீனாயிருக்கும், அதன் பிறகு ஒரு தவளை, இப்படியாக மேலே உயர்ந்து கொண்டே வந்தது. ஆனால் பாருங்கள், அது தொடர்ச்சியாக, படிப்படியாக மனி தனுடைய சாயலுக்கு அருகாமையில் வந்து கொண்டிருந்தது. மனிதன் தேவனுடைய பிரதிபலிப்பாக இருந்தான், ஆகையால் தான் புல்லிலிருந்து பூக்கள் தோன்றி, பூக்களிலிருந்து புதர்கள் தோன்றி, புதரிலிருந்து மரங்கள் தோன்றின. ஏன்? மறுபுறத்தில் நின்று கொண்டிருக்கும் ஜீவ விருட்சத்துக்கு அது ஒரு எடுத்துக்காட்டாய் அமைந்திருந்தது. இப்புறத்தில் இயற்கையில் காணப்படும் ஒவ்வொன்றும் மறுபுறத்தில் உள்ள இயற்கைக்கு மேம்பட்டவை அல்லது நித்தியத்துக்கு நிழலாக அமைந்துள்ளன. எனவே இவ்வுலகில் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன் இருந்து, இப்படிப்பட்ட ஒரு சரீரத்தை நாம் பெற்றிருப்பது, மரணமோ துயரமோ இல்லாத மறுபுறத்தில் நமக்காக காத்திருக்கும் சரீரத்தின் பிரதிபலிப் பாய் உள்ளது. அது தான் அப்படிப்பட்ட ஒன்றுக்கு நம் முடைய இருதயங்களை பசி கொள்ளும்படி செய்கிறது. பாருங்கள், நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்று நோக்கிக் கூப்பிடுகிறது. நாம்... அது அங்குள்ளதென்று ஏதோ ஒன்று நம்மிடம் கூறுகிறது. இத்தனை ஆண்டுகளாக... நான் மந்த புத்தியுள்ளவனாயிருந்து... அநேக தவறுகளைச் செய்ததற்காக தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களுக்கு முன்பாகவும் மன்னிப்பு கோருகிறேன். ஆனால் இத்தனை ஆண்டுகளாக, லட்சக்கணக்கானவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவே சிப்பதைக் காண நான் சிலாக்கியம் பெற்றேன். அவர்களை அங்கு வழிநடத்த கர்த்தர் எனக்கு கிருபை அருளினதால், அவருக்கு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அந்த நாளில் அவர்கள் அங்கிருப்பார்கள் என்று விசுவாசிக்கிறேன். 34. அந்த தரிசனம் நிறைவேறினது. என்னை அறியாம லேயே நான் எப்படி 5ம் வசனத்துடன் நிறுத்திக் கொண் டேன்! அது வரைக்கும் தான் நான் படிப்பது வழக்கம். அந்த அதிகாரத்தில் இன்னும் பல வசனங்கள் உள்ளன. கூட்டம் முடிந்து நீங்கள் உங்கள் ஓட்டல் அறைக்கு அல்லது வீட்டுக்குத் திரும்பி சென்ற பிறகு, இந்த மற்ற வசனங்களை வாசியுங்கள். ஏனெனில் நான் கூற நினைத்துள்ள அநேக வேத வசனங்களையும் குறிப்புகளையும் இங்கு எழுதி வைத்திருக் கிறேன். நீங்கள் வீடு திரும்பின பிறகு இதை படிக்க வேண்டு மென்று விரும்புகிறேன். அதை நான் எடுத்துரைப்பேன், அது ஒலிநாடாவில் இருக்கும். நீங்கள் அவைகளைக் குறித்துக் கொண்டாலும் சரி. 35. ஆண்களும் பெண்களும் காரியங்களைச் செய்வதற்கு தேவனுடைய ஆவியினால் வழிநடத்தப்படுகின்றனர் என்பதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்று அறிவேன். பாருங்கள்? இயேசுவே நமக்கு மாதிரி. நீங்கள் கவனிப்பீர்களானால், என்னுடன் சேர்ந்து பரி. லூக்கா 4ம் அதிகாரத்துக்கு ஒரு நிமிடம் வேதாகமத்தை திருப்புங்கள். உங்களுக்கு விசேஷமான ஒன்றை காண்பிக்க விரும்புகிறேன். நாம் அதிகப்படியான வேதவாக்கியங்களை எடுத்துக் கொள் ளாமல், இதை மாத்திரம் சில நிமிடங்கள் என்னுடன் சேர்ந்து படியுங்கள். லூக்கா 4ம் அதிகாரம், 14ம் வசனத்தில் தொடங்குவோம். இதற்கு இணையாக ஒன்று நடப்பதை நீங்கள் காண விரும்பினால், இதை உன்னிப்பாக கவனியுங்கள். இப்பொழுது கவனியுங்கள் : பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார். தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்த போது : கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்;இருதயம் நருங்குண்ட வர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்ட வர்களுக்கு விடுதலை யையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப் படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி... லூக்கா 4:14-20  36. இப்பொழுது, உங்களுக்கு வேண்டுமானால், இது எங்கு எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் அறிய விரும்பினால், அதை இங்கு எழுதி வைத்திருக்கிறேன், அதை ஓரக்குறிப்பி லிருந்தும் (marginal reading) ஒரு நிமிடத்தில் நான் எடுத்துக் கூறலாம். நீங்கள் கவனிப்பீர்களானால், இந்த சம்பவம் மாற்கு சுவிசேஷத்திலும் மற்ற இடங்களிலும் குறிக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர் படித்தது, ஏசாயா 61 : 1,2 வசனங்கள். அவர் அங்கு நிறுத்திக் கொண்டது வினோதமல்லவா? அடுத்த வசனம்... அவர் படித்தது அவருடைய முதலாம் வருகையுடன் சம்பந்தப்பட்டது. அடுத்த வசனம் அவருடைய இரண்டாம் வருகையுடன், நியாயத்தீர்ப்புடன், சம்பந்தப்பட்டது. அவர் வாசிப்பதை நிறுத்தி விட்டு, புஸ்தகத்தைச் சுருட்டினார். உங்களில் யாராவது ஸ்கோஃபீல்டு வேதாகமத்தைப் படிக்க நேர்ந்தால், அந்த பக்கத்தில் ஒரு அடி குறிப்பு (footnote) எழுதி யிருக்கக் காண்பீர்கள். பாருங்கள்? அவருடைய அடிக் குறிப்பில் "2" என்னும் தலைப்பு கொண்டதில், அது ஏசாயா 61:1,2, வசனங்களுடன் ஒப்பிடப்படுவதைக் காணலாம். ஒரு பாகம் .... அந்த சம்பவம்... இங்குள்ள இந்த வேதபாகம் இயேசு கர்த்தருடைய அநுக்கிரக. வருஷத்தை பிரசங்கம் பண்ண வேண்டியவராயிருந்தார். அடுத்த பாகம் அவருடைய இரண்டாம் வருகையுடனும் நியாயத்தீர்ப்புடனும் சம்பந்தப் பட்டது. பாருங்கள்? அவர் அத்துடன் நிறுத்திக் கொண்டதைப் பாருங்கள். 37. நான் 5ம் வசனத்துடன் நிறுத்திக் கொண்டதை இதற்கு முன்பு கவனிக்கவேயில்லை. ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகுங் காலம் வரும். நீயோ சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. பாருங்கள்? தேவனுடைய ஒத்தாசையினாலும் கிருபையினாலும் அதை நான் செய்ய முயன்று வந்திருக்கிறேன். இங்குள்ளவர்களும், ஒலி நாடாக்கள் செல்லும் வெளிநாடுகளிலுள்ள என் நண்பர்களும் இதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். வார்த்தைக்காக நான் எடுத்துக் கொண்ட நிலையின் காரணம், "திருவ சனத்தைப் பிரசங்கம் பண்ணு" என்பதாலே. ஆகையால் தான் நான் எந்த கோட்பாடுகளுடனும், எந்த ஸ்தாபனங்களுடனும் இசைந்து போகவில்லை. ஏனெனில் நான் வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டுமென்று தேவனிடமிருந்து கட்டளை பெற்றிருக்கிறேன். மற்றவர்கள் வேறெதையாவது செய்ய விரும்பினால், அது அவர்களைப் பொறுத்தது. 38. நீங்கள் கவனிப்பீர்களானால், என் ஊழியத்தைக் குறித்து நான் கண்ட தரிசனத்தில், அந்த மரங்களை நான் மாற்றி நடவில்லை. நான் ஒன்றை மற்றதுக்கு மாற்றவில்லை. நான், "திரித்துவக்காரராகிய நீங்கள் ஒருத்துவக்காரர் ஆகுங்கள்" என்றோ , ஒருத்துவக்காரர் திரித்துவக்காரர் ஆகுங்கள்" என்றோ சொல்லவில்லை. அவைகளை அதனதன் சொந்த தொட்டியில் நட்டேன். அது முற்றிலும் உண்மை. நான் திரித்துவக்காரரிடம் சென்றேன், ஒருத்துவக்காரரிடம் சென்றேன், எல்லோரிடமும் சென்றேன். ஆனால் நான் நடு நிலைமை வகித்து அவைகளில் ஒன்றையும் சேர்ந்து கொள்ள வில்லை. ஒரு சகோதரன் என்னும் முறையில், தரிசனம் என்னிடம் செய்யக் கூறினபடியே, நான் நடுநிலைமை வகித்தேன். அதன் விளைவாக நான் இருபக்கங்களிலுமுள்ள கனியைப் புசித்தேன் - இருபக்கங்களிலும் இரட்சிப்பு. 39. நீங்கள் கவனித்தீர்களா? இங்கு பல திரித்துவக் காரரும், பல ஒருத்துவக்காரரும், இன்னும் பல்வேறு ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களும் உட்கார்ந்து கொண்டி ருக்கின்றனர். அதைக் குறித்து வீண் சந்தடி செய்வதற்கு நாம் எவ்வளவு சிறியவர்களாய் இருக்க வேண்டும்! அந்த தரிசனத்தின் ஒரு பாகம் உண்மையாயிருந்தால், மற்ற பாகமும் உண்மையாயிருக்க வேண்டும். இரண்டு விதமான பழங்களும் சிலுவையில் காணப்பட்டன. பாருங்கள்? இரண்டுமே - 'ப்ளம்' பழமும், பீச் பழமும், இல்லை, 'ப்ள்ம்' பழமும் ஆப்பிள் பழமும் - கொத்து கொத்தாக சிலுவையில் காணப்பட்டு, என் மேல் விழுந்தன. இரண்டு பழங்களும். இவையனைத்தும் சிலுவையில் காணப்பட்டன. ஏனெனில் இவர்கள் அனைவருமே தேவனை விசுவாசித்து, பரிசுத்த ஆவி யினால் நிறைந்து, கிறிஸ்தவ கிரியைகளும் அடையாளங்களும் அவர்களைத் தொடருகின்றன. 40. ஸ்தாபனத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. மறுபடியும் பிறந்தவர்களே இதனுடன் சம்பந்தம் கொண்டி ருப்பார்கள். நீங்கள் தேவனிடம் பெற்றுள்ள அனுபவமே இதனுடன் சம்பந்தம் கொள்ளும்படி செய்யும். இதை அதிகமாகக் காண்கிறோம். நான் அநேக வேதவாக்கியங்களை இங்கு எழுதி வைத்திருக்கிறேன், அவைகளைக் குறிப்பிட எனக்குப் பிரியம். சிறிது கழிந்து குறிப்பிடலாம். 41. இப்பொழுது நான் 5ம் வசனத்திலிருந்து 18ம் வசனம் வரைக்கும் உங்களை கொண்டு செல்லப் போகிறேன். நேரத்தை காக்க, அதை நான் படிக்கப் போவதில்லை. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, அதை நீங்கள் கவனிப்பீர் களானால், அது மிகவும் பரிதாபம். 5ம் வசனத்துக்குப் பிறகு கவனியுங்கள். ஏனென்றால் நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது (அவன் புறப்பட ஆயத்தமா யிருக்கிறான். அவன் சொல்வதைக் கேளுங்கள். நான்... நல்லது, கவனியுங்கள், நான்...") நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டி ருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந் நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திர மல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். 42. அதன் பிறகு அவன், எல்லாவற்றையும் செய், இவை எல்லாவற்றையும் செய்" என்கிறான். எதை? அவனுக்கு மேலங்கியைக் கொண்டு வர. அதன் பிறகு அவன், .... தேமா என்னை விட்டுப் பிரிந்து .... என்கிறான். 43. அவனுடைய ஊழியத்தில் இப்படிப்பட்ட ஒரு நேரம் வரவேண்டியதாயிருந்தது. அவன் இளம் சுவிசேஷகனாக, இளம் தீர்க்கதரிசியாக, தொடங்கின போது, எல்லோருமே அவன் சார்பில் இருந்தனர். ஆனால் இங்கு நீங்கள் கவனிப் பீர்களானால்.... ..... எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள் (எதற்காக? வார்த்தையின் நிமித்தம்). 44. கலிலேயா நாட்டின் இளம் தீர்க்கதரிசியாகிய இயேசுவுக்கும், அவரைக் கைவிட்ட ஒரு நேரம் வந்தது. தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருக்கும் எல்லா மனி தருக்கும், உலகமும் மதசம்பந்தமான உலகமும் அவர்களைக் கைவிடும் ஒரு கட்டம் வரும். ஒரு நாள் இயேசு ஐயாயிரம் பேரை ஐந்து அப்பம் இரண்டு மீன்களைக் கொண்டு போஷித் தார். மீதியான துணிக்கைகளை அவர்கள் கூடைகளில் நிறைத்தனர். அடுத்த நாள் - அப்படித்தான் என்று நினைக் கிறேன் - எல்லோரும் அவரை விட்டுப் போய்விட்டார்கள். அவர் சீஷர்களை நோக்கி, நீங்களும் போய்விட மனதாயிருக் கிறீர்களோ? என்றார். அவர் நியமித்த எழுபது ஊழியக் காரரும் கூட அவரை விட்டுப் போய்விட்டனர். அவர், நீங்களும் போய் விட மனதாயிருக்கிறீர்களோ? என்றார். 45. அப்பொழுது பேதுரு இந்த பிரசித்தமான வார்த் தைகளைக் கூறினான்: ஆண்டவரே, நாங்கள் யாரிடத்தில் போவோம்? நித்திய ஜீவன் உம்மிடத்தில் மாத்திரமே உள்ளது" என்று 46. கவனியுங்கள், கைவிடும் நேரம் ஒன்று வருகிறது, அது வந்தே ஆக வேண்டும். அது கண்டிப்பாக வரும். அந்த நேரம் வரும் என்பதை நிரூபிக்க அநேக தீர்க்கதரிசிகளின் சம்பவங்களை இங்கு குறித்து வைத்திருக்கிறேன். எனக்கும் அந்த நேரம் வந்துவிட்டது. அதை விட்டு விலகியோடுவதற்கு முயற்சி செய்ய அவசியமில்லை. அது இங்குள்ளது. அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தீர்க்கதரிசிகள் அதை விட்டு விலகியோடவில்லை. அவர்கள் நின்று அதை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்பட வில்லை . 47. பவுல் சொல்வதைக் கவனியுங்கள்: "நல்ல போராட் டத்தைப் போராடினேன் , ஓட்டத்தை முடித்தேன் , விசுவா சத்தைக் காத்துக் கொண்டேன். ஒ , என்னே! அதற்கு கீழே யுள்ள வேதபகுதியில் அவன், "நான் மிருகங்களோடு போரிட்டேன். சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப் பட்டேன்" என்கிறான். அவன் போய் செய்த காரியங்களில், தேவன் அவனுக்கு நல்லவராயிருந்தார். ஆனால் அவன் போக வேண்டிய நேரம் வந்து விட்டது. 48. பவுலுக்கு உறுதுணையாக இருந்த தேமா போன்ற ஊழியக்காரன், அவனை விட்டுப் பிரிந்து போகக் காரண மென்ன என்று நாம் வியக்கிறோம். 49. சகோ. பாக்ஸ்டரை உங்களில் பலருக்கு நினைவி ருக்கும். அவர் தேமாவைக் குறித்து வேதத்தில் படித்தார். அவர், சகோ. பிரான் ஹாமே, நான் பரலோகத்துக்குச் செல்லும் போது, முதலாவதாக என்ன செய்வேன் தெரியுமா?" என்றார். நான், "என்ன செய்வீர்கள்?” என்றேன். 50. அவர், தேமா எங்கிருக்கிறான் என்று தேடிக் கண்டு பிடித்து, அவனைப் பலமாக அடிப்பேன். அவன் என்னிடம், 'பாக்ஸ்டர் , ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று கேட்பான். நான், எல்லோரும் பவுலைக் கைவிட்ட போது, நீயும் ஏன் அவனை விட்டுப் பிரிந்து போனாய்?' என்று கேட்பேன்" என்றார். அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அங்கு குத்து சண்டை கள் இருக்குமென்று எனக்கு நம்பிக்கையில்லை. சகோ. பாக்ஸ்டர் பவுலைக் குறித்து அதிக வருத்தமடைந்த காரணத் தால் அவ்வாறு கூறினார் என்று எண்ணுகிறேன். 51. நல்லது, பவுல் என்ன செய்தான்? அவனால் முடிந்த வரைக்கும் அவன் உத்தமத்துடன் பிரசங்கம் செய்தான், பரிசுத்த ஆவி அவன் மேல் தங்கியிருந்தார். அவன் பெண் பிரசங்கிகளைக் குறித்து எழுதின போது, அங்கு பிளவு ஏற்பட்ட தென்று நினைக்கிறேன். அவன், ஸ்திரீயானவள் சபைகளில் அமைதலாயிருக்க வேண்டும். அவள் உபதேசம் பண்ண நான் உத்தரவு கொடுக்கிறதில்லை" என்றான். அப்பொழுது அவன் சிறையில் இருந்தான், 52. அப்பொழுது பேராயர்களில் சிலர் என்ன சொல்லியிருப்பார்கள் தெரியுமா? °! சிறையில் உள்ள இவன், இப்படி நமக்கு எழுத வேண்டிய வேலை என்ன? அவனுக்கு மதுபானப் பிரியனாகிய தீமோத்தேயு இருக்கிறான். அவன் அங்கு தீமோத்தேயுவுக்கு திராட்சரசம் குடிக்கும்படி ஆலோசனை கூறுகிறான். அவன் சிறையில் இருந்து கொண்டு, பரிசுத்த ஆவி நமக்கு என்ன எடுத்துரைக்கிறார் என்று கூறுவதை விட்டு விட்டு, சுயமாக இதை எழுதுகிறான்” என்று கூறியிருப்பார்கள். 53. ஆனால் பவுல் இவ்வாறு கூறினான் தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றா வது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைக ளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன்” (1 கொரி. 14 : 36-37). பாருங்கள்? 54. பாருங்கள், அந்த நேரம் வருகிறது, நண்பர்களே. ஒலிநாடாக்கள் செல்லும் தேசத்திலுள்ளவர்கள், பிரிவினை நேரம் வந்து விட்டது என்று அறிந்து கொள்ள வேண்டு மென்று விரும்புகிறேன். அது வந்து பிரிவினை உண்டாக்க வேண்டும். என் முடிவு காலத்துக்கு நான் எவ்வளவு தூரம் இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை - என் வாழ்க்கை பாதையின் முடிவை அடைய. எனக்குத் தெரியவில்லை. அது தேவனைப் பொறுத்தது. நாளை என்ன நடக்குமென்றோ , யார்.... அது எனக்கு என்ன வைத்திருக்கிறதென்று நானறியேன். ஆனால் அதை யார் தம் கரங்களில் கொண்டுள்ளதென்று எனக்குத் தெரியும். எனவே அங்கு தான் என் விசுவாசம் கட்டப்பட்டுள்ளது - அதன் மேல். 55. தேமா அவனை விட்டுப் பிரிந்து போய் இரவு விடுதி களுக்கு (night clubs) சென்றான் என்று எனக்குத் தோன்றவில்லை. தேமா அப்படி செய்தான் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் தேமா ஆவியினால் நிறைந்தவன். அவன் பவுலுக்கு பெரிய உதவியாயிருந்தான். நீங்கள் தேமாவின் வரலாற்றைப் படிப்பீர்களானால், அவன் பிரசித்தி பெற்ற பிரசங்கி, நாகரீக மானவன். அவன் அறிவாளி. அவன் ஏன் பவுலை விட்டுப் பிரிந்து போக வேண்டும்? அது தான் காரியம். அப்படி பவுலை விட்டு அவன் பிரிந்து போகக் காரணமென்ன? அவன் இரவு விடுதிகளுக்கு செல்ல விரும்பினான் என்று எனக்குத் தோன்றவில்லை. தேவன் பவுலைப் பிரித்தார் என்பதே என் கருத்து. 56. தேமாவின் கருத்துக்கள் சிலவற்றை நாம் பார்ப்போம். அன்றொரு நாள் நான் பகலில் மலைப்பகுதியில் உட்கார்ந்து கொண்டு இவ்வாறு சிந்திக்கலானேன் : தேமா அவனை விட்டு ஏன் பிரிய வேண்டும்? அவனைக் கர்த்தரிடத் தில் வழிநடத்தின அந்த ஏழை பிரசங்கியை, முன்னணியில் - நின்று புறஜாதிகளின் மத்தியில் எழுப்புதலை ஆரம்பித்து வைத்த அந்த மனிதனை, அந்த தீர்க்கதரிசியை, அவன் ஏன் பிரிந்து செல்ல வேண்டும்? என்று எண்ணினேன். அவன் தீர்க்கதரிசி அல்லவென்று யாருமே கூறமாட்டார்கள். அவன் தீர்க்கதரிசியை விட மேலானவன், அவன் ஒரு அப்போஸ் தலன், புறஜாதிகளுக்கு மகத்தான அப்போஸ்தலனாகத் திகழ்ந்தவன். தேமா பவுலுடன் சேர்ந்து கொண்டு, அவனுடன் ஐக்கியம் கொண்டு, அவன் மேல் தேவ ஆவி யானவர் வல்லமையாக அசைவாடுவதைக் கண்டிருக்கிறான், கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று உறுதிப்படுத்தப்பட்ட அத்தகைய ஒரு மனிதனுக்கு அவன் ஏன் புறம் காட்ட வேண்டும்? பவுல் என்ன சொன்னான் என்று கவனித்தீர்களா? “இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து. தேமா பின்மாற்றம் அடைந்ததாக எனக்குத் தோன்றவில்லை, அப்படி அவன் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. அவன் பவுலைக் குறித்து தவறான கருத்தைக் கொண்டான் என்பதே என் கருத்து. 57. தேமா பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன். அவன் மிகவும் பணக்காரன். ஜனங்களுக்கு சில சமயங்களில் பணம் தான் மார்க்கம். அவர்கள் கலிபோர்னியாவில், "உங்களுக்கு மூன்று 'காடிலாக்' கார்கள் இல்லாவிட்டால், நீங்கள் ஆவியைப் பெற்றவர்கள் அல்ல" என்று கூறுகின்றனர். எனவே, நீங்கள் பண விஷயத்தில் வெற்றி காணாமல் இருந்தால், உங்களுக்கு நகரத்தில் சிறந்த ஆலயம் இரா விட்டால், ஜனங்கள் வரமாட்டார்கள். இங்கும் ஏறக்குறைய அப்படித்தான் உள்ளது. அது நிரூபிக்கிறது. உங்களுக்கு நாட்டிலேயே மிகச் சிறந்த சபை கட்டிடம் இருக்க வேண்டும். இல்லாவிடில் அவர்கள், "ஓ, நீ அப்படிப்பட்ட சிறு கூட்டத்தை சேர்ந்து கொண்டாயா?" என்று ஏளனமாகக் கூறுவார்கள். 58. நமது கர்த்தருக்குத் தலைசாய்க்க இடமில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? அவருக்கு ஒரு அங்கி மாத்திரமே இருந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள், அவர் எல்லோராலும் தள்ளப்பட்டார். அவருக்குத் தலைசாய்க்க இடமில்லை. அவரைக் குறித்தும் அவர்கள் அப்படித்தான் நினைத்து, அவருக்கும் அதை தான் செய்திருப்பார்கள். 59. பவுலின் ஊழியத்தில் ஏதோ தோல்வி நேர்ந்தது போல் தேமா கண்டிருக்க வகையுண்டு என்று நினைக்கிறேன். தேவனுடைய சமுகத்தில் இந்த கிழவன் கழுநீராகிவிட்டான் என்று அவன் நினைத்திருப்பான் என்று எண்ணுகிறேன். அவன் நினைத்திருப்பான், ஜனங்கள் கண்களைப் பிடுங்கி பவுலுக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமானால் ..... 60. பவுல் அவ்வாறு கூறினான்: “உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுத்திருப்பீர்களே” என்று (கலா. 4 : 15). பவுலின் கண்களில் கோளாறு ஏற்பட்டிருந்தது என்று நாம் எண்ணுகிறோம். அவன், "என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள் (big letter) என்கிறான் (கலா. 6 : 11). என்னிடம் வேத அகராதி உள்ளது. அது கொட்டை எழுத்துக் களில்" (big letters) என்று கூறுகிறது... அவன் ரோமாபுரியில் சிறையில் இருந்தான். அவனுடைய கண்களில் கோளாறு இருந்தது. அந்த பரம தரிசனத்தை அவன் கண்ட முதற்கு, அது அவனைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தது. எனவே, அவன் ... ஜனங்கள் அவர்களுடைய கண்களைப் பிடுங்கி அவனுக்குக் கொடுத்திருப்பார்கள், பாருங்கள். பவுல் வேதனையடைந்தான், அவனுடைய கண்கள் அவனைத் தொல்லைப்படுத்தி, அவனுக்கு வேதனையுண்டாயிற்று. அவனைச் சுகப்படுத்தும்படிக்கு அவன் கர்த்தரிடத்தில் மூன்று தரம் வேண்டிக்கொண்டான், அவன், "எனக்கு வெளிப்படுத்தப் பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு அது என்னைக் குட்டுவதற்காக அனுப்பப் பட்ட சாத்தானுடைய தூதனாயிருக்கிறது" என்றான் (2 கொரி 12 : 7). அது நன்றாக குணமடையும், மறுபடியும் அவனைத் தாக்கும். பிறகு அவன் குணமடைவான், அது மறுபடியும் அவனைத் தாக்கும். 61. மற்ற அப்போஸ்தலர்கள் ஒருமித்து பெற்றிருந்த ஊழியம் அனைத்திலும் பவுல் மேலான ஊழியத்தைப் பெற்றிருந்தான். அந்த அப்போஸ்தலர்களில் சிலர். "நாங்கள் இயேசுவுடன் நடந்தோம்" எனலாம். ஏன், தெருவில் போன மனிதன் கூட, அவர் உலகில் இருந்தபோது, அவருடன் கூட நடந்தான். ஆனால் அவர் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பரலோகத்துக்கு ஏறின பிறகு, பவுல் அவரை அக்கினி ஸ்தம்பத்தில் கண்டான். அவர் திரும்பி வந்து, தமஸ்குவுக்குப் போகும் வழியில் பவுலைக் கூப்பிட்டார், பாருங்கள், பாருங்கள். அவன் மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்ற எந்த அப்போஸ் தலரைக் காட்டிலும் ஒரு மேலான ஊழியத்தைப் பெற்றிருந 'தான். அவர்கள் அனைவரிலும் அவன் மேலானவன். அவன், "என்னை நான் உயர்த்திக்கொண்டு, 'உங்களுக்கு ஒன்றும் தெரியாது, நான் கர்த்தரை அவருடைய உயிர்த்தெழு தலுக்குப் பிறகு கண்டேன்' என்று கூறாதபடிக்கு” என்கிறான். 62. அவர்கள், "நாங்கள் அவருடன் கூட நடந்தோம் எனலாம். கலிலேயாவிலும் நாசரேத்திலும், சுற்றிலும் இருந்த ஊர்களிலிருந்த ஜனங்களும் கூட அவரோடு கூட நடந்தனர். அவர்கள் எல்லோருமே அவரோடு கூட நடந்தனர். 63. ஆனால், பாருங்கள், அவர் மாம்சமானதற்கு முன் பிருந்த ரூபத்தில் பவுல் அவரைக் கண்டு அவருடன் பேசினான். பாருங்கள்? அவர் அந்த ஒளியின் ரூபத்தில் இருந்த போது பவுலுக்குக் கட்டளையிட்டார். அவர் பவுலுக்குக் கட்டளையிட்டார், பவுல் அவரைக் கண்டான். அவன், "சகோ தரராகிய உங்களில் சிலரை விட நான் மேலானவன்' என்று கூறிக்கொண்டு என்னை உயர்த்தாதபடிக்கு, எனக்கு சாத் தானின் தூதன் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்றான். அது அவனை தாழ்த்துகிறது. அவன், அது என்னை விட்டு நீங்கும் படிக்கு நான் மூன்று தரம் கர்த்தரிடத்தில் வேண்டிக் கொண்டேன். அதற்கு அவர், 'சவுலே, இல்லை பவுலே, என் கிருபை உனக்குப் போதும்' என்று சொல்லிவிட்டார்" என்றான். அதன் பிறகு பவுல், "என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன். ஏனெனில் நான் பலவீனமாயிருக்கும் போதே பலமுள்ளவனா யிருக்கிறேன். நான் அதில் மேன்மை பாராட்டுவேன்' என்றான். 64. நீங்கள் கவனித்தீர்களா, ஊழியத்தை செய்து வந்த மற்றெல்லாரைக் காட்டிலும் மேலான ஊழியத்தைப் பெற்றி ருந்த அந்த மனிதன், அவர்கள் எல்லோரைக் காட்டிலும் மேன்மையான ஊழியத்தைப் பெற்றிருந்த பவுல், இயேசுவை அக்கினி ஸ்தம்பத்தில் கண்டு, அவரிடமிருந்து ஊழி யத்துக்குக் கட்டளை பெற்றவன், அதே தேவனால் எவ்வித சந்தேகமுமின்றி அதே அடையாளங்களினாலும் அற்புதங் களினாலும் வல்லமையினாலும் உறுதிப்படுத்தப்பட்டவன் , ஒரே ஒரு மேலங்கியை வைத்திருக்கும் அளவுக்கு அவ்வளவு தரித்திரன், கண்களைப் பிடுங்கிக் கொடுக்க ஆயத்தமாயிருந்த ஒரு கூட்டம் ஜனங்களுக்குப் பிரசங்கிக்கிறான். அவர்களில் சிலர் கோடீஸ்வரர்கள். இருப்பினும் பவுலுக்கு ஒரு மேலங்கி மாத்திரமே இருந்தது. அவன், "நீ வருகிறபோது, மேலங் கியைக் கொண்டு வா. இங்கு குளிராயுள்ளது" என்கிறான். அவன் மலைப்பிரதேசத்தில் இருந்தான். அவனுக்கு ஒரு மேலங்கி மாத்திரமே இருந்தது. 65. ஆனால் தேமா உயர்ந்த நிலையில் உயர் குணம் படைத்தவனாய், நாகரீகமுள்ளவனாய், கல்வியறிவு கொண்ட வனாய், பணக்காரனாய், அநேக உடைகளை உடையவனாய் இருந் தான். அவன், அந்த ஆசாமியிடத்தில் ஏதோ தவறுள்ளது. அவனுக்கு கண்களைப் பிடுங்கிக் கொடுக்க எத்தனையோ நண்பர்கள் ஆயத்தமாயுள்ளனர். இருப்பினும் அவன் மிகுந்த தரித்திரனாய், ஒரு மேலங்கியை மாத்திரம் வைத்திருக்கிறான். பவுலிடம் ஏதோ தவறுள்ளது" என்றான். 66. ஓ, உங்களுக்குத் தெரியுமா , அந்த ஆவி உலகத்தை விட்டுப் போகாது. அவர்கள் இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறார்கள். பாருங்கள்? பணம் தேவன் அல்ல. ஒரே ஒரு தேவன் மாத்திரமே இருக்கிறார். பாருங்கள்? ஆனால் ஜனங் கள், உங்களுக்குப் பெரிய ஊழியம் இருப்பதனால், இதை, இதை, இந்த பெரிய காரியங்களை, பெரிய பள்ளிக்கூடங்களை, பெரிய இன்னின்னதை சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். தேவன் அப்படிப்பட்ட காரியங்களின் மூலம் ஈடுபடுகிறதில்லை, இது என் சொந்த கருத்து. தேவன் ஒரு தனிப்பட்ட நபருடன் ஈடுபடுகிறார். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய தேவன் நம்மை நியமிக்கவில்லை. 67. ஆனால் பவுல் ஒரே மேலங்கியை உடையவனா யிருந்து, அங்கு குளிராயுள்ளதால் அதைக் கொண்டு வரும் படி தீமோத்தேயுவிடம் கூறுகிறான். ஊ,ஊ. ஆயிரக்கணக் கானவர்களுக்கு பிரசங்கம் செய்த அத்தகைய ஊழியத்தைக் கொண்டிருந்த பவுல், அநேக அற்புதங்களை நடப்பித்த ஒரு ஊழியம்; இயேசுவை அக்கினி ஸ்தம்பத்தில் கண்டு அவரிட மிருந்து கட்டளை பெற்றவன், ஒரு மேலங்கியை மாத்திரமே உடையவனாயிருந்தான். தேமா, - இப்படிப்பட்ட ஒரு ஆசாமி" என்று சொல்லி அவனை விட்டுப் பிரிந்து போனான். 68. அவன் துரோவாவிலே பிரசங்கம் செய்து கொண்டி ருந்த போது, அங்கு கன்னன் ஒருவன் இருந்ததாக நாம் காண்கிறோம். அவன் ஒரு அயோக்கியன். அவன் கிறிஸ்தவ மார்க்கத்தின் மேல் வெறுப்பு கொண்டிருந்தான். அவன் தன்னாலான வரைக்கும் பவுலுக்குத் தீமை செய்து, அவனைச் சிறையிலிட்டான். ஒவ்வொரு... பவுலும் கூட தீமோத்தேயு விடம், அவனைக் குறித்து எச்சரிக்கையாயிரு" என்றான். இங்கு தேமா இருக்கிறான்! ஓ தேவனே, ஜனங்கள் இதைக் கேட்கட்டும். இங்கு தேமா, தன்னுடன் தர்க்கம் செய்ததற்காக ஒருவனைக் குருடாக்கின ஒரு மனிதனின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். கிறிஸ்து சபை பிரசங்கிமார்களே, இதைக் கேட்க ஆயத்தமாகுங்கள். ஒரு சமயம் ஒருவன் என்னிடம், "என்னைக் குருடாக்கு! என்னைக் குருடாக்கு உனக்கு பரிசுத்த ஆவி உள்ளதே, என்னைக் குருடாக்கு!" என்றான். நான், "நீ ஏற்கனவே குருடாயிருக்கிறாய்" என்றேன். பாருங்கள்? | 69. பவுல் ஏன் அந்த கன்னனைக் குருடாக்கவில்லை? அப்படி நினைக்கும் ஜனங்களின் மேலுள்ள அதே விதமான ஆவிதான் தேமாவின் மேல் இருந்தது. அவனுடன் தர்க்கம் செய்ததற்காக ஒரு மனிதனைக் குருடாக்கினவன், இப்பொ ழுது பட்டினத்தில் ஒரு கன்னன் தன் ஊழியத்தை கெடுக்க விட்டுக் கொடுக்கிறான். தேமா, 'அவன் தீர்ந்து விட்டான். அவன் தன் வரங்களையெல்லாம் இழந்து விட்டான்" என்று கூறியிருப்பான் என்பதில் சந்தேகமில்லை. 70. இனறைக்கும் அந்த ஆவி ஜீவித்து, சகோதரனே, நீங்கள் தீர்ந்து விட்டீர்கள்" என்று கூறுவதை நீங்கள் காண் கிறீர்கள் அல்லவா? ஓ, அது ஜனங்களின் தலைக்கு மேல் சென்று விடுகிறது. அவர்களுக்கு அது புரிவதில்லை, அவ்வளவுதான். பாருங்கள்? அவர்களால் அதை காண முடிவதில்லை. பாருங்கள்? அவர்கள் அதை புரிந்து கொள்வ தில்லை . 71. இப்பொழுது தேமா.... அதை விரும்பினான் என்ப தற்காக பவுல் அந்த மனிதனைக் குருடாக்கவில்லை. இயேசு, "என் பிதா எனக்கு முதலில் காண்பிக்காமல் நான் எதையும் செய்வதில்லை" என்று கூறவில்லையா? சில ஆண்டுகளுக்கு முன்பு என் தாயார் மரணப் படுக்கையில் பில், என் கதி என்ன?" என்று கேட்டபோது, தேவன் என்னிடம் முதலில் கூறாமல் நான் எதையும் சொல்ல முடியாது என்று நான் கூறவில்லையா? அது தான் நடந்தது. மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது, மனிதன் தொடக்கத்திலேயே தோல்வியா யிருக்கிறான். அவன் தேவன் அவன் மூலம் கிரியை செய்யும் ஒரு பிரதிநிதியாயிருக்கிறான். தேவன் தமது சொந்த சித்தத்தை அவன் மூலம் நடப்பிக்கிறார். நீங்கள் இதை, அதை, மற்றதை பெற்றுள்ள மிகவும் மோசம் போக்கும் ஜனங்களைக் காணும்போது, அதை விட்டு விலகியிருப்பது நலம். பாருங்கள்? இயேசுவே அப்படி செய்யவில்லை. அவர், "பிதா செய்கிற கிரியைகளே நானும் செய்கிறேன். நான் என்ன செய்ய வேண்டுமென்று அவர் காண்பிக்கிறார். அதன் பிறகு அதை நான் செய்கிறேன். நான் வேறெதையும்... அதை தவிர வேறெதையும் செய்ய முடியாது என்றார். 72. இங்கு தேமா பவுலைக் காண்கிறான்; பவுல் அத்தகைய ஒரு ஊழியத்தை உடையவனாயிருந்த போதிலும், அவன் மிகுந்த தரித்திரனாய். ஒரே ஒரு மேலங்கியை சொந்தமாக வைத்திருந்து. தீமோத்தேயு வரும்போது அதைக் கொண்டு வரக் கூறினான். ஒரே மேலுங்கி கிறிஸ்துவைப் போல் பவுலும் ஒரு மாதிரியாக இருந்தான். அவனுக்கு ஒரு மேலங்கி மாத்திரமே இருந்தது. அப்படியிருக்கும்போது. ஐசுவரியமும் நிறைய பணமும் இன்றைக்கு ஜனங்களுக்கு முக்கியமாய் இருக்கக் காரணம் என்ன? இப்பொழுது கவனியுங்கள், அவன் பிரசங்கிப்பதற்கு மாறாக உள்ள எவரிடமும் அவன் திரும்பி, நீ கொஞ்ச காலம் குருடாயிருப்பாய்' என்று சொல்லும் அளவுக்கு அவனுக்கு வல்லமை இருந்தது. அந்த மனிதன் குருடானன். 73. இங்கு ஒரு கன்னன் இருக்கிறான், அவன் மற்ற மனிதனைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகம் தீமை செய்தும் தப்பித்து விடுகிருன். அப்பொழுது தேமா, பார். இந்த கிழவன் தீர்ந்து விட்டான், அவன் தன் ஊழியத்தை இழந்து விட்டான்' என்று எண்ணியிருப்பான். இல்லை. இல்லை, அவன் தன் ஊழியத்தை இழந்து போகவில்லை, இல்லவே இல்லை. தேவன் காரியங்களை அவ்வாறு செய்வதில்லை. ஆம். இப்பொழுது கவனியுங்கள். 74 பவுல் ஒரு விதத்தில் எலியாவைப் போலிருந்தான். தீர்க்கதரிசியாகிய எலியா. தேவனுடைய கட்டளையைப் பெற்ற வனாய் மலையின் மேல் சென்று. வானத்திலிருந்து அக்கினி விழும்படிக்கு கட்டளையிட்டான். அது விழுந்தது. அவன் மழை பெய்யும்படி கட்டளையிட்டான். அது பெய்தது. அவன் தேவனுடைய செய்தியின் அதிகாரத்தை உடையவனாய். நாநூறு தீர்க்கதரிசிகளைக் கொன்று, அவர்கள் தலைகளை வெட்டி, மலையிலிருந்து உருட்டி விட்டான். இவையனைத்தும் அவன் செய்த பிறகு அவன் ஒரு பெண்ணின் - மாய்மாலக்காரப் பெண்ணின் பயமுறுத்தலுக்கு அஞ்சி ஓடினான். அவள் ஒரு அஞ்ஞானி, யேசபேல் என்னும் அந்த ஸ்திரீ, இவை யனைத்துக்கும் காரணமானவள், அவள் தான் இதற்கு காரணமாயிருந்தாள். அவன் முதலாவதாக அவளைக் கொன்றிருக்க வேண்டும். ஆனால் காரியங்களைச் செய்ய தேவன் தமது சொந்த வழிகளை வைத்திருக்கிறார். அவருடைய ஊழியக்காரர் மாத்திரமே. தேவனுடைய சித்தத்தின்படி அந்த கிரியைகளைச் செய்ய முடியும். 75. நண்பர்களே, உங்களால் காண முடிகிறதல்லவா? தேவன் அசையும் விதத்தில் நீங்களும் அசைய வேண்டும். எத்த முறை நான் சகோதரருக்கு ஆலோசனை கூறி யுள்ளேன் அவர்களிடம் நடந்து சென்று 'சகோதரரே. அதனால் ஒரு வித்தியாசமுமில்லை, நாம் சகோதரராயிருப்போம்" என்று சொல்லி அவர்களுடன் கைகுலுக்க எனக்கு எவ்வளவு ஆவல்! அப்படி நான் செய்வேனானால், "திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு" என்று எனக்களிக்கப்பட்ட கட்டளையை நான் எவ்வாறு கைக்கொள்ள முடியும்? அவர்களுக்கு அதைச் செய்ய பிரியமில்லை. 76. நான் போதகர்களின் மத்தியில் இருந்திருக்கிறேன். அவர்களில் ஒருவர், சகோ. பிரான்ஹாமே, என் அத்தை இங்கு வந்திருக்கிறாள். நீர் தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்க தரிசி என்று அறிவேன். அவளிடம் சென்று அவளுக்குப் பார்வை அளியுங்கள்" என்று கூறியதுண்டு. என்னால் முடிந்தால் நான் நிச்சயம் செய்வேன். அவர் என்னிடம் அதை செய்யக் கூறும் வரைக்கும், என்னால் செய்ய முடியாது. பாருங்கள்? யாருமே செய்ய முடியாது, எலியா செய்ய முடியாது, வேறு யாருமே செய்ய முடியாது. 77. நாம் காண்பது என்னவெனில் பவுல்... தேமா பவுலுடன் ஊழியம் செய்து கொண்டிருந்த போது, பவுல் ஒரு சப்பாணியைக் கண்டு அவனிடம், குணமடைவதற்கேற்ற விசுவாசம் உனக்குண்டென்று காண்கிறேன். எழுந்து காலூன்றி நில். இயேசு கிறிஸ்து உன்னை குணமாக்குகிறார்" என்று கூறி அவன் குணமாவதைக் கண்டிருக்கிறான். பவுல் வியாதியஸ்தர்களை சொஸ்தப்படுத்துவதை அவன் கண்டி ருக்கிறான். இருப்பினும் பவுல் அவன் நண்பன் தியோப்பிலு வியாதியாயிருக்கும்படி விட்டு விடுகிறான். 78. பவுல் தன் ஊழியத்தை இழந்து விட்டான். அப்படித்தான் தேமா எண்ணியிருக்க வேண்டும் : அவனுக்கு உண்மையில் சுகமாக்கும் வரம் இருந்தால். பின்னை ஏன் அவனுக்கு மிகவும் விசுவாசமாயிருந்த அவன் நண்பனை சுகமாக்கவில்லை? அவன், அவனை வியாதிப்பட்டவனாய் விட்டு வந்தேன். எனக்கு மேலங்கி இல்லை. நீ வரும்போது அதைக் கொண்டு வா. அந்தக் கன்னனைக் குறித்து எச்சரிக்கை யாயிரு . அவன் பட்டணத்தில் நடந்த அந்த கூட்டத்தைப் பாழாக்கி விட்டான். நான் பட்டணத்தை விட்டு போக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவன் என்னை சிறையில் தள்ளினான்' என்கிறானே" என்று. தேமா, 'இவன் என்ன இப்படிப்பட்ட போதகனாக மாறிவிட்டானே" என்று சொல் வதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. பாருங்கள்? 79. சகோதரனே. இன்றைய உலகில் தேமாவின் ஆவி கள் நிறைய உள்ளன. இதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. பாருங்கள்? அவர்களிடம் இதை விளக்கிக் கூறத் தேவையில்லை. ஏனெனில் எப்படியும் அவர்கள் இதை புரிந்து கொள்ளப் போவதில்லை. பாருங்கள்? பாருங்கள் ? கிறிஸ்துவின் ஊழியக்காரன் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறான். 80. இங்கு நமது டீகன்மார்களில் ஒருவரான டோனி சேபல் (Tony Zabel). இன்றிரவு அவர் இங்கிருக்கிறாரா இல்லையாவென்று தெரியவில்லை. அவர் வழக்கமாக இங்கிருப்பார். அண்மையில் அவர் என்னிடம் வந்து, "நான் ஒரு சுவையான சொப்பனம் கண்டேன். நான் பரலோ கத்துக்குப் போகும் வழியைத் தேடிக் கொண்டிருப்பதாக சொப்பனம் கண்டேன். அப்பொழுது கறுப்பு அங்கி அணிந்த ஒருவர் வருவதைக் கண்டேன். அவர் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் சென்று, 'பரலோகத்துக்குப் போகும் வழி எது?" என்று கேட்டேன். அவர், 'எனக்கு முன்னால் போய்க் கொண்டிருக்கும் மனிதனைக் கேள்' என்றார்' என்று கூறினார். அப்படி சொன்னவர் அவர் முன்பு சென்று கொண்டிருந்த சபையின் போதகர். 81. அவர் சிறிது தூரம் சென்ற போது, வேறொரு மனிதனைச் சந்தித்தார். அவரும் கறுப்பு அங்கி அணிந்த வராய், பாடல்களைப் பாடிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரும் ஒரு போதகர். இந்த இரு போதகர்களும் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்கள். அவர் சொன்னார்... அவர் மிகவும் அருமையானவர். அவர் அந்த போதகரிடம், - இந்த மலையின் உச்சிக்கு செல்ல எது வழி? என்று கேட்டாராம். அவர், இங்கு வா, மலையின் மேல் சிறு உருவம் படைத்த ஒருவர் நின்று கொண்டிருப்பதை காண முடிகிறதா?” என்று கேட்டார். நான், 'ஆம்' என்றேன். அந்த மனிதன் நீண்ட 'கோட்டும் மாடு மேய்க்கும் பையன் அணியும் தொப்பியும் அணிந்து கொண்டிருந்தார்' என்றார். 82. கென்டக்கியில் ஒருவர் என்னைக் குறித்து பேசிக் கொண்டிருந்த போது, 'காண்பதற்கு அந்த ஆசாமி போதகரைப் போலவே இல்லை" என்றாராம். ஒருக்கால் ஒரு பண்ணையாளனைப் போல் காணப்படலாம். ஆனால், உங்க ளுக்குத் தெரியுமா. காணும் தோற்றம் முக்கியம் வாய்ந்ததல்ல. 83. மலையின் மேல் நின்று கொண்டிருந்தது நான் என்று அவர் கூறினார். அவர் மலையின் மேலேறி என்னருகில் வந்த போது, நான் அவர் கையைப் பிடித்து அவர் மலையின் உச்சியை அடையும் வரைக்கும் அவரை வழிநடத்தினேனாம். கடக்க வேண்டிய ஒரு வனாந்தரம் அங்கிருந்தது. நான், டோனி, உம்மை நான் இங்கு விட்டு விட வேண்டும். இனிமேல் நீங்களே நடந்து செல்ல வேண்டும்" என்றேனாம். அவர், சகோ. பிரான்ஹாமே, இங்கிருந்து நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாராம். 84. நான், டோனி, இங்கு வாருங்கள். குனிந்து பாருங்கள். இரத்தம் தோய்ந்த வெறுங்கால் அடிச்சுவடுகளை நீங்கள் காண முடிகிறதல்லவா? இதை நான் வழிநெடுக பின்பற்றி வந்தேன். அதை பின்பற்றி செல்லுங்கள்' என்றே னாம். அது ஒன்றை மாத்திரமே மனிதனுக்குச் சுட்டிக் காட்ட நான் அறிந்திருக்கிறேன். ஒரு கோட்பாட்டுக்கோ அல்லது ஏதோ ஒரு வகையான உணர்ச்சிக்கோ சுட்டிக் காட்டுவ தல்ல, ஆனால் வேதாகமத்துக்கு வழி நடத்திச் செல்லும் இரத்தம் தோய்ந்த அந்த அடிச்சுவடுகளையே சுட்டிக் காட்டுகிறேன் - இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் தோய்ந்த அடிச்சுவடுகள். 85. அந்த மனிதனுக்கு எப்படியிருந்திருக்கும், அவனுக்கு அநேக கோடீஸ்வரர் நண்பர்கள் இருந்தும் கூட, ஒரு மேலங்கி. அந்த மனிதனுக்கு.... ஒருவனை குருடாக்க வல்லமையிருந்தது. இருப்பினும் வேறொருவன் அவனை பட்டினத்திலிருந்து விரட்டியடித்தபோது சும்மாயிருக்கிறான். அதைக் குறித்து அவன் ஒன்றுமே செய்யவில்லை. அவன் எழுந்து நடந்து சென்றான். அவன் வியாதியஸ்தர்களுக்கு ஜெபித்து சுகப்படுத்தினான், ஆனால் அவன் நண்பன் வியாதியாயிருக்கும்படி விட்டு விட்டான். தேமா அவனை விட்டுப் பிரிந்து சென்றான், மற்றவர் அனைவரும் அவனை விட்டுப் பிரிந்து சென்றனர். எல்லோரும் அவனை விட்டுப் பிரிந்து சென்றனர். பவுல், "எல்லாரும் என்னைக் கை விட்டார்கள்" என்றான். எல்லோரும் அவனை விட்டுப் பிரிந்து சென்றனர். 86. இதை நான் கூறுகிறேன், ஒரு மனிதன் வார்த்தையில் உண்மையாக நிற்கும் பட்சத்தில் - ஒரு கூட்டத்தில் மாத்திரமல்ல, எல்லா கூட்டங்களிலும்; ஒரு மனிதன் வார்த்தையில் உண்மையாக நிற்கும் பட்சத்தில், அவர்கள் அவனை விட்டுப் பிரிந்து செல்லும் நேரம் வரும். முற்றிலுமாக. அவர்கள் அதை செய்வார்கள். அவர்கள் அதை நமது கர்த்தருக்கு செய்தார்கள். எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்". தேமாவும் மற்றவர்களும் என்ன நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? லூக்கா ஒரு வைத்தியன் என்றும், பவுல் சென்றவிடங்களில் எல்லாம் இந்த வைத்தியனை கூட்டிச் சென்றான் என்றும் நமக்கு - வேத வசனங்களை அறிந்திருக்கும் நமக்கு - தெரியும் அல்லவா? அவன் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கித்து, அவனு டைய நண்பனை வியாதியஸ்தனாக விட்டு விடுகிறான். அவன் மிகவும் ஏழை, அவனுக்கு ஒரு மேலங்கி மாத்திரமே இருந்தது. ஒரு மனிதனை குருடாக்க அவனால் முடிந்த போது, ஒருவன் அவனைப் பட்டினத்திலிருந்து விரட்டியடிப்பதைப் பார்த்து சும்மா இருக்கிறான். பாருங்கள், அவன் தீர்ந்து விட்டதாக அவர்கள் எண்ணினர். ஆனால் அவன் தீர்ந்து விடவில்லை. அவன் இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகளில் முற்றிலுமாக நடந்து அதை பின்பற்றிக் கொண்டிருந்தான். உங்களுக்கு விளங்குகிறதென்று நம்புகிறேன். அவன், "எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்” என்றான். 87. தேமா இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து, மனி தரின் புகழ்ச்சியை விரும்பினான். "ஹல்லோ , டாக்டர் தேமா, நீங்கள் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்." 88. ஓ, நிச்சயமாக அவர்கள் அதை விரும்புகின்றர். இயேசு அவர்களை நோக்கி, "நீங்கள் தேவாலயங்களில் நின்று கொண்டு, 'ரபீ' என்றழைக்கப்பட விரும்புகிறீர்கள். இதன் நிமித்தம் நீங்கள் அதிக ஆக்கினையை அடைவீர்கள்" என்றார். பாருங்கள்? 89. இந்த வைத்தியன் பவுலுடன் கூட செல்வதை அவர்கள் கண்டபோது - பவுல் லூக்காவை கூட்டிச் சென்றான் - "லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான், அவன் ஒருவன் தான் என்னைக் கைவிடவில்லை" என்று பவுல் கூறினான். லூக்கா , அவனுக்கு நல்லவனாயிருந்தான். லூக்கா அவனுக்கு செழிப்பானவன். அவனுடைய ஊழியத்துக்கு லூக்கா அவனுக்கு அவசியமாயிருந்தான். இந்த வைத்தியன் அவன் போனவிடமெல்லாம் அவனுடன் சென்றான். ஆனால் அவனோ தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கம் செய்தான், தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கம் செய்து, சப்பாணிகளை சுகப்படுத்தி, மரித்தோரை உயிரோ டெழுப்பி, இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்து, மகத்தான தரிசனங்களைக் கண்டு, நடக்கவிருக்கும் சம்பவங்களை முன்னு ரைத்த அப்படிப்பட்ட மனிதன் தன் உடன் ஊழியக்காரன் வியாதியாயிருக்கும்படி விட்டு விடுகிறான். வேண்டுமானால் அவன் லட்சக்கணக்கான டாலர்களைச் சம்பாதித்து, கோடிக்கணக்கான டாலர்கள் பெறுமான கட்டிடங்களையும், பெரிய பள்ளிகளையும் கட்டியிருக்கலாம், ஆனால் அவனுக்கோ அணிந்துகொள்ள ஒரு மேலங்கித் தவிர அதிகம் இருக்கவில்லை. 90. இதைக் கண்ட தேமா, அப்படிப்பட்ட ஒரு மனிதனுடன் நான் சம்பந்தம் கொள்ள மாட்டேன். அவன் தாழ்ந்த வகுப்பினன். நான் ஸ்தாபன சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டு அங்கு முக்கியமான ஒருவனாக இருப்பேன்" என்றான். அப்படியானால், அந்த ஏழை மனிதனை விட்டுப் பிரிந்து அந்த கதிக்கு அவனை ஆளாக்கினதற்காக, நானும் பாக்ஸ்டர் செய்ததையே அவரைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன். அவன் பவுலுடன் கூட நின்றிருக்க வேண்டும். அவனை கிறிஸ்துவினிடத்தில் நடத்தினவன் பவுலே . ஆனால், பாருங்கள், அவன் ஆவியின் வழிநடத்துதலை அறிந்திருக்க வில்லை. தேவனுடைய சித்தம் என்னவென்பதை அறிந்து கொண்டு, அதன் பிறகு அந்த தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதை அவன் அறிந்திருக்கவில்லை. பாருங்கள்? அவர்கள் அவனை அந்த நிலையில் விட்டுப் பிரிந்தனர். அவனை விட்டுப் பிரிந்தனர். எல்லாரும் அவனைக் கைவிட்டனர். 91. அதை எவ்வளவாக நான் சிந்தித்துப் பார்க்கிறேன்! வார்த்தையில் உண்மையாய் நிற்கும் எந்த மனிதனையும் ஜனங்கள், விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ, கைவிடு வார்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அதை சில நிமிடங்கள் ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன். உங்களை நான் நீண்ட நேரம் வைத்துக் கொள்ள மாட்டேன், ஏனெனில் நீங்கள் நாளை காலை இங்கு வரவேண்டும். எப்பொழுதுமே, தேவனுடைய ஊழியக்காரன் வார்த்தைக்கு உறுதியாய் நிற்கும் பட்சத்தில், எல்லாரும் அவனைக் கை விடுவார்கள். அது .... நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அதை காணலாம். வேதத்தில் எந்த காலத்திலும், வரலாற்றிலும். அதாவது, ஒரு மனிதன் வார்த்தையில் உண்மையாய் நிலைத்திருக்கும் பட்சத்தில்; அவன் எவ்வளவு பிரபலமான வனாயிருந்த போதிலும், அவன் வார்த்தைக்கு உறுதியாய் நிற்கும் பட்சத்தில், மதசம்பந்தமான உலகம் அவனைக் கை விட்டு அவனைப் பிரித்து விடும் ஒரு நேரம் வரும். அதை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் முடிய உள்ள வேதபாகத்திலும், நிசாயா ஆலோசனை சங்கத்துக்கு முன் பிருந்த காலத்திலும், நிசாயா பிதாக்களிலும் நீங்கள் காணலாம். வார்த்தையில் நிலைநின்ற ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு பரிசுத்தவானும், ஒவ்வொரு தீர்க்கதரிசியும், தேவனுடைய ஒவ்வொரு உண்மையான ஊழியக்காரனும், மத சம்பந்தமானவர்களால் கைவிடப்பட்டு புறக்கணிக்கப் பட்டனர். பவுல் அவர்களில் ஒருவன். 92. இன்றைக்கு அப்படிப்பட்ட ஒருவன் இருக்க நேர்ந்தால், அதே காரியம் தான் நிகழும். அது முற்றிலும் உண்மை. நீங்கள் அந்த இடத்தை அடைந்தே தீர வேண்டும். அது வந்தே ஆக வேண்டும். அப்படிப்பட்ட ஊழியத்தை உடைய ஒரு மனிதன் உலகத்தை தன் பெருவிரலின் கீழ் கொண்டிருக்க வேண்டுமென்று அவர்கள் கருதுகின்றனர். அவன் கொண்டிருக்க வேண்டுமாம், ஆனால் அவர்களோ அவன் பெருவிரலின் கீழ் வரமாட்டார்கள். பாருங்கள்? அப்படிப்பட்ட ஊழியத்தை உடைய ஒரு மனிதன் உலகத்தை தன் பெருவிரலின் கீழ் கொண்டிருக்க மாட்டான், அதை அவன் தன் எஜமானின் பெரு விரலின் கீழ் வைப்பான். ஏனெனில் அவன் தனக்கு பிரதிநிதியாயிருக்கவில்லை, அவன் தன் எஜமானின் பிரதிநிதியாக இங்கிருக்கிறான். 93. உங்களுக்குத் தெரியும், மனிதர் ஒருவருக்கொருவர் கனத்தை நாடுகின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் கனம் பண்ணுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தேவனை கனவீனப்படுத்துகின்றனர். பாருங்கள்? நாம் நம்மிடையே பெரிய மனிதர்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் பெரியவர்கள் அல்ல, சிறியவர்களே. நாம் அனைவரும் சிறியவர்கள். நம்மிடையே ஒருவர் மாத்திரமே பெரியவரா யிருக்கிறார், அது யாரென்றால் நம்முடைய கர்த்தர். பாருங்கள்? நாமோ நம்முடைய ஸ்தாபனங்களை தேவனைக் காட்டிலும் பெரிதாக செய்து விட்டோம். "மகத்தான பரிசுத்த சபை, இது, அது, மற்றது, மகத்தான பரிசுத்த பேராயர் என்றெல்லாம். அப்படி ஒன்றுமே கிடையாது. அது மனிதனை கனப்படுத்துதல். ஒருவர் மாத்திரமே பரிசுத்தராயிருக்கிறார், அது தான் தேவன். பரிசுத்த ஆவி - அவர் தேவன் - நமது மத்தியில் இருக்கிறார். நாம் பரிசுத்தர் அல்ல, நமக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியே பரிசுத்தர். அது நாமல்ல... அற்புதங்கள் நடப்பதை நாம் காணும்போது, அதை செய்வது நாம் அல்ல, பரிசுத்த ஆவியானவரே அந்த கிரியைகளைச் செய்கிறார். இயேசு, "கிரியைகளைச் செய்வது நானல்ல; அது என் பிதா. அவர் என்னில் வாசமாயிருக்கிறார், அவர் தான் கிரியைகளைச் செய்கிறார்" என்றார். எனவே அந்த கிரியைகளைச் செய்தது பவுல் அல்ல. சரி. காலங்கள் தோறும் உண்மை யான ஊழியக்காரர் இருந்ததாக நாம் காண்கிறோம்., 94. சில நிமிடங்கள் நான் வலியுறுத்த விரும்புவது இதுவே. மனிதன் வார்த்தையில் உண்மையாய் நிலைத்திருந்து. எல்லாரும் அவனைக் கைவிட்டுப் பிரிந்து போகும் அந்த நேரத்தில் தான் தேவன் பிரவேசித்து, அவனைத் தற்காத்து, அவனுடைய ஊழியத்தை முடிசூடுகிறார். பாருங்கள்? அது உண்மை. என்ன ஒரு ஆறுதல்! தேவனுடைய வார்த்தையின் வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் ஆறுதல் உண்டாகிறது. உலகம் என்ன கூறின போதிலும், உலகம் என்ன செய்த போதிலும் கவலையில்லை. உலகம் செய்வதன் அடிப்படையில் நமது நம்பிக்கை கட்டப்படுவதில்லை. 95. அந்த பாடல் மிக அருமையானது. அதை என்னால் பாட முடிந்தால் நலமாயிருக்கும். அதை நான் பாடவேண்டு மென்று எப்பொழுதும் விரும்புவதுண்டு. பாருங்கள்? "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் புதுப்பெலன் அடை வார்கள், அவர்கள் செட்டைகளை அடித்து உயர எழும்!. வார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், அவர்கள் நடந்தாலும் சோர்ந்து போகமாட்டார்கள். கர்த்தாவே, காத்திருக்க எனக்குக் கற்பியும். அது எனக்கு பிடிக்கும். "உமது சொந்த நல்ல நேரத்தில், நீர் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளுவீர். மற்றவர் செய்வதில் நான் சார்ந் திராமல், உம்மிடத்திலிருந்து பதிலுக்காக ஜெபத்தில் காத்திருக்க எனக்கு கற்பியும். அது தான். உண்மையான ஊழியக்காரன் எவனும், என்ன நடந்த போதிலும், வேத வாக்கியங்கள் தவறாது என்று அறிந்தவனாய், தன் எஜமானின் நேரம் வரும் வரைக்கும் காத்திருக்கிறான். வேதவாக்கியங்கள் சத்தியமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நேரத்தில், தேவன் வழக்கமாக பிரவேசித்து அவர்களுக்குதவி செய்கிறார். 96. எலியா கைவிடப்பட்ட போது அவனுக்கிருந்த நிலையை நாம் கவனிப்போம். அவன் ஏன் கைவிடப்பட்டான் அவன் வார்த்தையில் உண்மையாய் நிலைத்திருந்த காரணத் தால். அவன், "எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்" என்றான். அவன் சமுகத்திலிருந்தும், ஸ்தாபனத்திலிருந்தும், தேசிய ஸ்தாபனத்திலிருந்தும் - அதாவது இஸ்ரவேல் தேசத்தின் தேசிய சபையிலிருந்தும் பிரஷ்டம் செய்யப் பட்டான். குருவானவர்கள்,மற்றெல்லாருமே அவனை வெளியே துரத்தி விட்டனர். அவனுக்குப் பவுலுக்கிருந்த ஒரு மேலங்கி கூட இல்லை. அவன் ஒரு சிறு ஆட்டுத்தோம் துண்டினால் - அதாவது தோலினால் - அவனைச் சுற்றக் கொண்டு மலையில் வாசம் செய்து. காகங்களினால் போஷிக்கப் பட்டான். ஆம், ஐயா! ஏன்? தேவனுடைய வார்த்தையின் நிமித்தம். அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்கு உண்மையாக இருந்த காரணத்தால். அவர்கள் எல்லோரும் நவீனமாகி விட்டனர். தேசத்தின் முதலாம் பெருமாட்டி, யேசபேல், நாகரீகப்பாணி தோன்றும்படி செய்தாள். குரு வானவர்களும் போதகர்களும் அதில் விழுந்து போய் அதற்கு ஒத்துழைப்பு தந்தனர். ஆனால் எலியா அப்படி செய்யவில்லை. அவன் வார்த்தையில் உண்மையாய் நிலைத்திருந்தான். அப்படி செய்ததற்காக அவன் கைவிடப்பட்டு முடிவில், கர்த்தாவே, நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள்' என்று முறை யிட்டான். 97. ஆனால் தேவன் அவனுக்கு சிறிது ஆறுதலை அளித்து, "நான் இன்னும் ஏழாயிரம் பேரை அங்கு வைத்திருக்கிறேன்" என்றார். 98. பாருங்கள், அவன் ஒருவன் மாத்திரம் மீதியா யிருந்ததைக் குறித்து எலியா பெருமை கொண்டான் என்று நான் நினைக்கவில்லை. அவன் கைவிடப்பட்டான் என்பதை வலியுறுத்தவே இதைக் கூறினான் என்று நினைக்கிறேன். கூட்டம் நடத்த எண்ணி அவன் ஒரு போதகரை அணுகும் போது அவர் அவனை வெளியே துரத்தி விடுவார். அவன் அங்கு செல்லும்போது, "முட மதாபிமானியே, இங்கிருந்து. போய்விடு! இங்கிருந்து போய்விடு! அதை செய்" என்று கூறிவிடுவார்கள். அவனுக்கு பிறகு எலிசா வந்தபோது அது இன்னும் வெளிப்படையாயிற்று. அவர்கள் என்ன செய் தார்கள்? அவர்கள் மேலும் .... அந்த இளைஞனுக்கு வழுக்கை தலை இருந்தது. அவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளியே அனுப்பி இந்த - போலி"யை கேலி செய்யக் கூறினார்கள். எலியா, எலிசா இருவருமே போலிகளாகக் கருதப்பட்டனர். இந்த பிள்ளைகள், மொட்டைத் தலையா! மொட்டைத் தலையா! எலியாவைப் போல் நீ ஏன் ஏறிப்போகவில்லை" என்று கேலி செய்தார்கள். எலியா மேலே சென்றதாக அவர்கள் நம்ப வில்லை. உ,ஊ. பாருங்கள்? அவன் போலிகளில் ஒருவன் என்று கருதினர். ஆனால் இவ்விருவருமே வார்த்தையில் உண்மையாய் நிலைத்திருந்து, உறுதிப்படுத்தப்பட்ட ஊழி யத்தை உடையவராயிருந்தனர். எலியா உறுதியாக நின்றான். சரி. 99. தானியேல் உண்மையாக நின்றான். அந்த கருத்தை நான் எங்கு பெற்றேன் என்று உங்களுக்குத் தெரியுமா? அது தானியேல் 12ம் அதிகாரம், இல்லை , 9ம் அதிகாரம். நீங்கள் .... தானியேல் வார்த்தைக்கு உண்மையாக நின்றான். அவனுக்கு நேர்ந்தது என்ன? அவன் ராஜாவுக்கு வலது கை ஆளாக இருந்த போதிலும், அவன் வார்த்தைக்கு உண்மையாக நின்ற காரணத்தால் பிரஷ்டம் செய்யப்பட்டு சிங்கங்களின் கெபியில் போடப்பட்டான். அவன் வார்த்தைக்கு உண்மையாய் நின்ற தேவனுடைய மனிதன்! 100. எபிரேய பிள்ளைகள் வார்த்தையில் உண்மையாய் நிலைத்திருந்தனர். எக்காளம், நாகசுரம் போன்ற கீத வாத்தி யங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும் போது சிலையைப் பணிந்து கொள்ளாதவன் எரிகிற அக்கினிச் சூளையின் நடுவில் போடப்படுவான்' என்னும் ராஜாவின் கட்டளை பறை சாற்றப்பட்டிருந்த போதிலும், அவர்கள் சிலைக்கு தங்கள் முதுகைத் திருப்பினர். இதன் விளைவாக அவர்கள் ஜனங் களால் வெறுக்கப்பட்டப் போதிலும், சமுகத்தால் தள்ளி வைக்கப்பட்டப் போதிலும், அவர்கள் வார்த்தையில் உண்மை யாய் நிலைத்திருந்தனர். அது எனக்குப் பிரியம். 101. யாக்கோபு இன்னுமொருவன். அவன் ..... நீண்ட காலம் வீட்டை விட்டு வெளியேயிருந்தான். அவனுடைய ஜனங் களைக் காண வீடு திரும்ப அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்புக்கு, அந்த சந்திப்புக்கு இணங்கி அவன் பயணம் செய்து கொண்டிருந்தான். அவனுக்கு அங்கு எல்லாமே நன்றாக இருந்தது. ஆனால் அவன் வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக தேவன் அவனுடன் ஈடுபடத் தொடங் கினார். அவன் வழியில் சென்று கொண்டிருந்த போது, அவன் இரண்டு இறுக்கமான இடங்களுக்கு இடையேயுள்ள ஒரு இடத்தை அடைந்தான். இந்த பக்கம் அவனுடைய மனைவியும் பிள்ளைகளும். அவனை வெறுத்த அவன் சகோதரன் ஏசா அவனைச் சந்திக்க திரளான ஜனங்களுடன் வந்து கொண்டிருக்கிறான். அவன் பெனியேல் என்னும் ஆற்றண்டை நின்று கொண்டிருந்தான். என்ன ஒரு நிலை! அவனை பகைத்த ஏசா அவனைச் சந்திக்க திரளான ஜனங்களுடன் வந்து கொண்டிருக்கிறான். ஆற்றின் மறுபக்கத்தில் அவனுடைய மனைவியும் - இரண்டு மனைவிகளும் - பிள்ளைகளும். அவன் இறுக்கமான இடத்தில் மாட்டிக் கொண்டான். ஏன்? அவன் அந்த தேசத்திலேயே வாழ்ந்திருந்தால் எல்லாம் நன்றா யிருந்திருக்கும். ஆனால் அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. தேவனுடைய வார்த்தை அவன் சொந்த நாட்டுக்குத் திரும்ப அவனுக்கு அழைப்பு கொடுத்தது. அல்லேலூயா! தேவன் அந்த மனிதனை ஆசீர்வதிப்பாராக. அவனுக்கும் ஒரு மாறுதல் ஏற்பட வேண்டும். ஆம், ஐயா! 102. இயேசு பிதாவின் வார்த்தைக்கு உண்மையாய் இருந்தார். என் பிதா சொன்னதை மாத்திரமே நான் செய்வேன். 'மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்' என்று எழுதியிருக்கிறதே" இயேசு என்றென்றைக்கும் அந்த வார்த்தைக்கு உண்மையாய் இருந்தார். ஆனால் அவருடைய நண்பர்களை இழக்கும்படி யான நேரம் ஒன்று வந்தது. எல்லோருமே அவரைக் கை விட்டு சென்று விட்டார்கள் - எல்லோருமே. அவர் பரிக சிக்கப்பட்டு இகழப்படுவதை ஜனங்கள் கண்டபோது. அவர் மேலிருந்த நம்பிக்கை அவர்களை விட்டுப் போய்விட்டது. "கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டிருந்த மனிதனைக் கூப்பிட்டு அவனை உயிரோடெழுப்பின இந்த மனிதன்; பிழை யின்றி வரப்போகும் சம்பவங்களை முன்னுரைத்த இந்த மனிதன்; நியாயஸ்தலத்தில் தாடியைப் பிய்த்ததனால் இரத்தம் வடிந்த முகத்துடனும், குடிகார சேவகர்களின் உமிழ்நீர் முகத்தில் வடிந்து கொண்டு தலையில் கந்தை துணி சுற்றப் பட்டு, அவருடைய தலையை கோலினால் அடித்து, 'உன்னை அடித்தது யாரென்று சொல், அப்பொழுது விசுவாசிப்போம்' என்று சேவகர்கள் கூறும் நிலையை எவ்வாறு அடைய முடியும்?" என்று எண்ணினர். சீஷர்கள் ஆ' என்று சொல்லி அவரை விட்டுப் போய் விட்டனர். 103. பாருங்கள், தேவன் செய்ததை அவர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட்டனர். சிவந்த சமுத்திரத்தில் மோசே நின்று கொண்டு இஸ்ரவேலரை நோக்கி, தேவன் தலைசிறந்த பத்து அற்புதங்களைச் செய்திருக்க, அவரைத் தேவனென்று நீங்கள் அறிந்து கொள்ளாதபடிக்கு இன்னும் சிறுவர்களாயிருக்கிறீர்களா?” என்றான். அவர் சென்று தேசங் களை மடங்கடித்து அவைகளின் மேல் சாபத்தை வருவித்தார். அவர் தவளைகள், பேன்கள், வண்டுகளை வருவித்து, சங்காரத் தூதனை தேசத்தில் கடக்கச் செய்து எல்லா தலைச்சன் பிள்ளை களையும் கொன்று போட்டார். இருப்பினும் அவர்களுக்கு சிவந்த சமுத்திரத்தின் அருகில் தேவனைப் பின்பற்ற மனதி ல்லை. எவ்வளவு சீக்கிரமாக, உங்கள் கீர்த்தி... அவர்கள் ஒரு லட்சம் மனிதர் - ஒருக்கால் அது பத்து லட்சம் இருக்கக் கூடும் - கையில் மிகவும் பளபளப்பான ஈட்டிகளை ஏந்தி வரு வதையும், ரதங்களின் முழக்கத்தையும், புழுதி பறப்பதையும் கண்டபோது, அவர்கள் தைரியத்தைக் கைவிட்டு பின்வாங்கிப் போய், - மோசே, நாங்கள் எகிப்திலேயே மடிந்திருக்கலாம்" என்றனர். பாருங்கள்? அவர்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தம் அவர்களை வனாந்தரத்தில் சாகப்பண்ணுவதாக தேவன் கூறினார். மோசே, உன் ஊழியம் முடிந்து விட்டது. அவ்வளவு தான். இனிமேல் நீ ஒன்றுமில்லை. பாருங்கள், அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கிரகித்துக் கொள்வதில்லை. 104. அந்த வாலிப ரபீ அல்லது போதகர், அல்லது கலிலேயாவின் தீர்க்கதரிசியாகிய இயேசு அந்த அற்புதங் களைச் செய்த போதும் அது தான் சம்பவித்தது. அவர்கள், அவரால் எப்படி இதை சகித்துக் கொள்ள முடிகிறது? அவரால் கல்லறையின் முத்திரையை உடைத்து மரித்துப் போன மனிதனை நித்தியத்திலிருந்து உயிரோடு கொண்டு வர முடியும்போது, ஒரு மனிதன் அவரை சங்கிலியினால் கட்ட அவர் எப்படி அனுமதிக்க முடியும்? மரித்து உலர்ந்து போயி ருந்த விதவையின் மகனை அவரால் உயிரோடெழுப்ப முடியும் போது, அவர் எப்படி இதை அனுமதித்தார்? மரித்து கல்லறையில் நாறிக் கொண்டிருந்த லாசருவை அவர் உயிரோடெழுப்பி, 'நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமா இருக் கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென் றைக்கும் மரியாமலும் இருப்பான்' என்று கூறின பிறகு, அவர் சங்கிலியால் கட்டப்பட்டு, முகத்தில் துப்பப்பட்டு அவருடைய வாயைத் திறவாமல் இதை எப்படி அவரால் சகிக்க முடிந்தது?” என்று எண்ணினர். அவர் ஊழியத்தை இழந்து விட்டார்" என்று சீஷர்கள் நினைத்தனர். ஆம், அப்படித்தான் அதன் போக்கு உள்ளது. தேவனே, இந்த ஏழை உலகம்! 105. அவருடைய சபையும் கூட, அவர் பிரியம் கொண்டு எல்லாவற்றையும் கூறின அந்த பன்னிரண்டு பேர்களில் ஒருவராவது... அவர்கள் அவருக்குப் புறம் காட்டினர். ஒருவன் மாத்திரமே அவர் கூட நின்றான். அது தான் யோவான். எல்லாமே போய்விட்டு, எல்லா நம்பிக்கையும் அற்ற நேரத்தில், அவர் கட்டப்பட்டு, கொண்டு செல்லப் பட்டு, இகழப்பட்டு. துப்பப்பட்டு, அவருடைய முது கை பின்னால் ... அவை வேதவாக்கியங்களை நிறைவேற்றின என்று அவர்கள் அறியாமல் இருந்தனர். 106. இன்று நடப்பவைகளும் கூட, ஒரு எழுத்தும் பிசகா மல் வேதவாக்கியங்களை நிறைவேற்றுவதாய் உள்ளன என்று நீங்கள் அறியவில்லையா? ஜனங்கள் ஏன்... இவைகளைக் கூறு கின்றனர்? ஸ்தாபனங்கள் ஏன் கோபமடைகின்றன? அவை கள் ஏன் அப்படி செய்கின்றன? அவர்கள் இப்படி செய்வார்களென்று வேதம் உரைக்கிறது. அவர்கள் அங்கு வந்து அதை செய்து, அவர்கள் செய்வதைக் காணக்கூடாதபடிக்கு குருடாயிருக்கின்றனர். யூதாஸ் தன் பாகத்தை ஏற்று நிறைவேற்றுவதை அறிந்திருந்தான் என்று நினைக்கிறீர்களா? ஏசா தான் செய்த காரியங்களை செய்திருப்பான் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. அவர்கள் கண்களி ருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலும் இருக் கிறார்கள்" என்று ஏசாயா கூறினான். ஆனால் வேதவாக்கி யங்களை கவனியுங்கள், அவை வெளிப்படையாகின்றன. பாருங்கள் ? நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம், அது அப்படித்தான் இருக்கும். 107. அவருடைய சபை அவரைக் கைவிட்டது. மனிதர் அனைவரும் அவரைக் கைவிட்டனர். இயற்கையும் கூட. கை விடப்பட்டவர்களை நாம் குறிப்பிடும்போது, இவருடைய கைவிடப்படுதலை பவுலின் கைவிடப்படுதலுடன் ஒப்பிடும் போது, பவுலின் கைவிடப்படுதல் ஒன்றுமேயில்லை எனலாம். அவர் சிருஷ்டித்த சிருஷ்டிப்பும் கூட அவரைக் கைவிட்டன - சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், தேவனும் மனிதனும். தேவன், இயற்கை, மனிதர் அனைவரும் அவரைக் கைவிட்ட காரணத்தால் யாரும் அங்கிருக்கவில்லை. அவர் தனியாக மரித்தார். அவர் தமது ஊழியத்தை இழந்து விட்டாரா என்ன? அவர் அதை இழக்கவில்லை, அவர் தமது ஊழியத்தை நிறைவேற்றினார். கைவிடப்படுதல் அதனுடன் சம்பந்தப் பட்டது. அது தான் நடக்கிறது. அது அதனுடன் சம்பந்தப்பட்டது. 108. எல்லாமே அவரைக் கைவிட்டன. ஆனால் அந்த நேரத்தில் தான் தேவன் காட்சியில் தோன்றினார். வார்த் தையை அறிந்துள்ள எந்த மனிதனும், வார்த்தை தேவன் என்பதை அறிந்தவனாய், அதில் நிலைத்திருக்கிறான். பாருங்கள்? வார்த்தையானது தன்னைத் தான் வெளிப்படுத்த வேண்டும். அது அப்படி செய்தேயாக வேண்டும். ஏனெனில் வார்த்தை தேவனாயுள்ளது. காலங்கள் தோறும் வழிவழியாக அது மற்றவர்களுக்கு கிரியை நடப்பித்தால், அதே விதமாக அது இப்பொழுதும் கிரியை நடப்பிக்க வேண்டும். ஏனெனில் அது தேவன். அதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். இயேசு, அவர் வார்த்தையின் பரிபூரணம் என்பதை அறிந்தி ருந்தார். அவர் தீர்க்கதரிசி மாத்திரமல்ல, அவர் தேவன். அவர் வார்த்தை . ஆகையால் தான் மனிதர் மாத்திரம் அவரைக் கைவிடவில்லை. இயற்கையும் கூட அவரைக் கை விட்டது. இயற்கை முழுவதும் - நட்சத்திரங்கள், சந்திரன் போன்றவை - அவரைக் கைவிட்டது. அவர் மரித்த போது. வெளிச்சம் இருக்கவில்லை, பாருங்கள், ஏனெனில் அவர் சகலத்தையும் சிருஷ்டித்தவர். அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை " (யோவான் 1 :10). பாருங்கள்? அவர் சகலத் தையும் சிருஷ்டித்தவர். சகலத்தையும்! ஒன்றே ஒன்று என்னவெனில், நாம் சிருஷ்டிப்பதில்லை, நாம் மாற்ற முயல் கிறோம். மாற்ற முயல்பவரே அவரைக் கைவிட்டு நடந்து செல் கின்றனர். பாருங்கள்? வார்த்தை தன்னை உண்மையாய் காண் பிக்கும் நேரம் வரும் போது, அது அப்படித்தான் இருக்கும். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், அந்த நேரத்தில் தான் தேவன் காட்சியில் தோன்றுகிறார். 109. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க் கையில் - அவருடைய வாழ்க்கையின் முதல் ஒன்றரை வருடங் களில் அவர் மகத்தான கிரியைகளைச் செய்த போது - ஓ, அவர் எவ்வளவு பெரியவராயிருந்தார்! அவரைப் போன்ற எவருமே இவ்வுலகில் இருந்ததில்லை - அவருக்கு முன்னால் இருந்ததுமில்லை, அவருக்குப் பின்னால் இருக்கப் போவது மில்லை. ஆனால் என்ன நேர்ந்தது? அவர் மற்றெல்லாரைக் காட்டிலும் அதிகமாக பரியாசம் செய்யப்பட்டார், சிருஷ்டிப் பினால் பரியாசம் செய்யப்பட்டார். எல்லாமே அவரைப் பரி யாசம் செய்தது. ஏனெனில் அது சீர்குலைந்த நிலையில் இருந்தது. ஆகையால் தான் ஜனங்கள் தேவனுடைய உண்மை யான ஊழியக்காரனைப் பரியாசம் செய்கின்றனர். ஏனெனில் அவர்களுடைய இருதயம் சீர்குலைந்த நிலையில் உள்ளது. இயற்கை சீர்குலைந்த நிலையில் உள்ளது. அது தான் காரணம். 110. இயற்கையானது சீர்குலைந்த நிலையிலேயே இவ் வளவு அழகாயிருக்குமானால், அது தேவனுடைய சித்தத்துக்கு மாற்றப்படும்போது எப்படியிருக்கும்! இரண்டு பேர் சுமக்கும் அளவுக்கு இந்த சீர்குலைந்த நிலம் திராட்சை குலைகளைத் தருமானால், அது தேவனிடத்திற்கு திரும்பும் போது எப்படி யிருக்கும்! கிறிஸ்து வரும்போது வனாந்தரம் புஷ்பத்தைப் போல் செழிக்கும் (ஏசா. 35 :1). அது மாற்றப்படும். அப்பொழுது வறண்ட நிலம் நீரூற்றுகளாகும் (ஏசா. 35 :7). பூமி செழிக்கும், செழிக்கும். ஒ, அந்த காலத்தில் மனிதர்களின் இருதயங்கள் மாற்றப்பட்டு அவர்கள் தேவபக்தியுள்ள மனிதர் களாயிருப்பார்கள். இப்பொழுது இதை தெரிந்து கொள்வோ மானால், அந்த இடத்தில் நாம் வாழுவோம். ஆமென். 111. 'அந்தகார நேரத்தில், பிளவுண்ட கன்மலைகளின் மத்தியிலும், இருளடைந்த ஆகாயத்தின் மத்தியிலும் என் இரட்சகர் தலைசாய்த்து ஜீவன் விட்டார். திறவுண்ட திரை பரலோகத்தின் மகிழ்ச்சிக்கும் முடிவற்ற நாளுக்கும் போகும் வழியை வெளிப்படுத்தினது" என்று கவிஞன் பாடினான். நமக்கு வழியை உண்டுபண்ணவே அவர் மரிக்க வேண்டிய தாயிருந்தது. அது உண்மை . தேவன் என்ன செய்தார்? அவர் வார்த்தைக்கு உண்மையாயிருந்து சிலுவையைத் தழுவினார். அது அவருடைய ஊழியத்தின் முடிவா? அவருடைய ஊழியம் அத்துடன் தீர்ந்து விட்டதா? இல்லை, தேவன் அதை மிகப் பெரிய கிரீடத்தினால் முடிசூட்டினார். அவர் ஈஸ்டர் காலையில், உயிர்த்தெழுதலின் போது அதை முடிசூட்டினார். மரித்தோரி லிருந்து உயிரோடெழுந்து சதாகாலங்களிலும் உயிரோடி ருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் ஊழியத்தை அவர் முடிசூட்டினார். மனிதர் அவரைக் கைவிட்டதனால் அவர் தீர்ந்து விடவில்லை. அவர் முடிசூட்டப்பட்டார்! ஆம், ஐயா. ஆம், ஐயா. அவர் கைவிடப்பட்டதனால், தேவன் அவரை உயிரோடெழுப்பின போது அவருக்கு முடிசூட்ட வேண்டிய தாயிருந்தது. | 112. எலியாவின் விஷயத்திலும் அப்படித்தான். அவனைக் குறித்து சில நிமிடங்களுக்கு முன்பு நாம் பேசினோம். அந்த ஏழை வயோதிப தளர்ந்த தீர்க்கதரிசியாகிய எலியா வனாந் தரத்தில் இருந்தான். காகங்கள் கொண்டு வந்த ஆகாரத் தினால் அவன் போஷிக்கப்பட்டான். அவன் தோல் சுருங்கின வனாய், உடல் வெயிலில் கருகி, ஒரு பக்கம் எண்ணெய் கலசம் தொங்கிக் கொண்டிருக்க, மீசை வெளியில் நீட்டிக் கொண்டு, அவனுடைய மண்டை ஒருக்கால் வழுக்கை யடைந்து சூரிய வெப்பத்தினால் கருகி, தடியை ஊன்றிக் கொண்டு இப்படி தள்ளாடி நடந்திருப்பான். ஆனால் அவனுடைய வயோதிப இருதயத்தின் ஆழத்தில் தேவனுடைய ஆவியின் துடிப்பு இருந்தது. அவருடைய வயோதிப களைப்புற்ற ஊழியன் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் பாதையின் முடிவுக்கு வருவதை தேவன் கண்ட போது, அவனைக் கைவிட்டாரா? அவர் ஒரு இரதத்தை கீழே அனுப்பி, அவருடைய களைப்புற்ற ஊழியக்காரனை ஏற்றிக் கொண்டு, "ஏனோக்கைப் போல் நீ நடக்க வேண்டாம். உன்னை இரதத்தில் வீட்டுக்குக் கொண்டு செல்கிறேன்' என்றார். அது உண்மை. வீடு வரை உண்டான இரத சவாரியினால் அவர் அவனுடைய ஊழியத்தை முடிசூட்டினார். அது மோசமான ஒன்றல்ல, உங்களுக்குத் தெரியும். ஆம், அவன் வீட்டுக்கு நடக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவன் களைப்பா யிருந்ததால் அவர் ஒரு இரதத்தை அனுப்பி, அவனை ஏற்றிக் கொண்டார். அது எனக்குப் பிரியம். ஆமென். ஏழை, சிறு வயோதிப களைப்புற்ற ஊழியக்காரன். அவர் அவனை இரதத்தில் ஏற்றி வீடு சேரும்படி செய்தார். 113. தானியேல் தேவனுக்கு மிகவும் விசுவாசமுள்ள வனாயிருந்து, அறைக்குள் நுழைந்து... "உனக்குத் தெரியுமா . அந்த மனிதன் ஒரு காலத்தில் இந்த இராஜ்யத்தில் பெரிய வனாயிருந்தான். அவன் எல்லாவற்றையும் முன்னுரைத்தான். அவன் ஜோசியர்களைக் கொண்டு வந்து அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான்" என்று பேசிக் கொண்டார்கள். அந்த மேதியபெர்சியர் அவனுக்கு என்ன செய்தனர் பாருங்கள். தரியுவின் ராஜ்யபாரத்தில் தானியேல் தேவனுக்கு உண்மையாயிருந் தான். அவன் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாயிருந்து அதை எதனுடனும் கலக்கவில்லை. அவர்கள், 'அவனுடைய ஊழியம் தீர்ந்து விட்டது. ஏனெனில் இன்னும் சில நாட்களில் அவன் சிங்கங்களின் கெபியில் போடப்படுவான் என்று நான் செய்தித்தாளில் படித்தேன்" என்று சொல்லி யிருப்பார்கள். அரசாங்க சிறைக்குச் செல்வது. அப்படி ஏதோ ஒன்று, பாருங்கள். "நாங்கள் அவனைச் சிங்கங்களின் கெபியில் போடப் போகிறோம். ஆனால் தேவன் என்ன செய்தார்? ராஜாவின் இருதய மாற்றத்தின் மூலம் தேவன் அவனுடைய ஊழியத்தை முத்தரித்து, உலகத்திலிருந்த எல்லா பாஷைக்காரரும். ஒவ்வொருவரும், தானியேலின் தேவனுக்கு பயப்பட வேண்டும், ஏனெனில் அவர் விடுவிக்கும் தேவனாயிருக்கிறார் என்னும் கட்டளையை பிறப்பிக்கச் செய்தார். ஆமென். 114. எனவே பாருங்கள், தேவனுடைய வார்த்தையில் உண்மையாய் நிலைத்திருக்கும் தேவனுடைய உண்மையான ஊழியக்காரரை மனிதர் கைவிடும் அந்த நேரத்தில் தான் தேவன் அவர்களுடைய ஊழியத்தை முடிசூட்டும் நேரத்தினால் முத்தரிக்கிறார். 115. ஆம், நெபுகாத்நேச்சரின் ஆளுகையின் கீழிருந்த எபிரேய பிள்ளைகள் சிலையைப் பணிந்து கொள்ள மறுத்தனர். அவர்கள் தேவனுக்கு உண்மையாய் நிலைத்திருந்தனர். தேவனுடைய வார்த்தை, "நீ யாதொரு விக்கிரகத்தை நமஸ் கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்" என்று உரைத்திருந்தது. அவர்கள் வார்த்தைக்கு உண்மையாய் நிலைதிருந்தனர். அது அவர்களுடைய செய்தித் தாளில் வெளியாயிருந்தது - அந்த நாட்களில் அவர்களுக்கு எது இருந்ததோ அது. செய்தியைப் பரப்ப அவர்கள் வெவ்வேறு முறைகளைக் கையாண்டனர், ஆனால் அவர்களுக்கு அக்காலத்தில் செய்தித்தாள்கள் கிடையாது. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக செய்தித்தாள்கள் என்று கூறினேன். ஏழு மடங்கு சூடாக்கப் பட்ட அக்கினிச் சூளையில் அவர்கள் அங்கு போடப்பட்டு சுட்டெரிக்கப்பட வேண்டியதாயிருந்தது. அதற்கு அநேக நாட்களுக்கு முன்பே அக்கினிச் சூளையை ஏழு மடங்கு சூடாக்க அவர்கள் எல்லா பொருட்களையும் அதில் போட்டு எரித்துக் கொண்டிருந்தனர் - அதை ஏழு மடங்கு அதிகப்படியாக சூடாக்க. அப்படிப்பட்ட ஒரு அக்கினிச் சூளை, நீங்கள் அதற்கு நூறு கெஜம் தொலைவில் உள்ள போதே உங்களை எரித்து சாம்பலாக்கி விடும். ஆனால் அவர்கள் அந்த அக்கினிச் சூளைக்குள் போடப்பட்டு, அக்கினியின் மணமும் கூட அவர்கள் மேல் வீசாமல் வெளி வந்தனர். உடனே நெபுகாத்நேச்சர், - இந்த தேவனை சேவித்துப் பணியாதவன் எவனும், அவனும் அவனுடைய பிள்ளைகளும் கொல்லப்படு வார்கள். அவன் வீடு சுட்டெரிக்கப்பட்டு எருக்களமாக்கப் படும்" என்று கட்டளை பிறப்பித்தான். அது உண்மை . பாருங்கள்? அவன்... அவர்கள் வார்த்தைக்கு உண்மையாய் நிலைத்திருந்த காரணத்தால், உலகம் முழுவதும் எழுப்புதல் உண்டானது. அது தான் நடந்தது. ஆம், ஐயா. வார்த்தையில் உண்மையாய் நிலைத்திருங்கள். அது எப்பொழுதுமே அற்புத மான பலனை அளிக்கும். 116. யாக்கோபு. அவனைக் குறித்து சற்று முன்பு பேசினோம். அவனுடைய பெயரை இங்கு எழுதி வைத்திருக் கிறேன். அவன் கோழையாயிருந்தான், ஆனால் அவன் நிலைத்திருந்தான். அவன் ஏசாவுக்கு பயந்திருந்தான். என்னே, என்னே! அவன் தேவனை விட்டு தூரமாயிருந்ததை அறிந்திருந்தான். அவன் அத்தனை ஆண்டுகளாக தேவனை விட்டு தூரமாயிருந்தான். இருப்பினும் அந்த வார்த்தையில் உண்மையாய் நிலைத்திருக்க அவன் முயன்று வந்தான். தேவன் அவனை அழைத்து வீடு திரும்பும்படி கட்டளையிட்டார். அவன் தன் கடமையில் நிலைத்திருந்தான், ஏசா ஒரு பெரிய சேனையுடன் அவனை எதிர்கொண்டு அங்கு வந்து கொண்டி ருந்தான். அந்த சமயத்தில் தான் அவனுடைய பெயர் யாக்கோபு, "எத்தன், வெட்கமுள்ளவன்" என்பதிலிருந்து இஸ்ரவேல், தேவனுடையராஜகுமாரன்' என்பதாக மாற்றப்பட்டது. அடுத்த நாளில் அவன் ஊழியம் முடி சூடப்பட்டு, அங்கிருந்து வந்தான். அவன் நேராக நடந்து சென்று ஏசாவை சந்தித்தான். அவன் யாரிடமும் உதவி கேட்கவில்லை. ஆமென். அவன் வார்த்தைக்கு உண்மையா யிருந்தான். அப்படித்தான் தேவன் காரியங்களைச் செய்கிறார், இல்லையா? அவர் தமது சொந்த வழியில் காரி யங்களைச் செய்கிறார். ஆமென். 117. என் சகோதரரில் அநேகருக்கு ஸ்தாபன சகோதரர் களிடையே அதிக கீர்த்தி உள்ளது. அவர்கள் பெயரை நீங்கள் கூறினால், அது எங்கும் தீயைப் போல் பரவுகிறது. அது உண்மை - அந்த நபரின் பெயரை நீங்கள் கூற நேர்ந்தால். ஆனால் உண்மையை சொல்லப் போனால் அன்றொரு நாள் நதிக்கரையில் கர்த்தர் என்னிடம் பேசின போது, அதுவே உலகம் எங்கும் எழுப்புதல் உண்டாவதற்கு மூலக்காரணமா யிருந்தது. அதிலிருந்து தான் எல்லா பெரிய சுவிசேஷ கர்களும் எழும்பினர். 118. அவர்கள் எந்த ஸ்தாபனங்களிலிருந்து தோன்றின ரோ, அந்த ஸ்தாபனங்களின் சகோதரரிடமே திரும்பிச் சென்றனர். அவர்கள் இங்கு வந்து ஸ்தாபனங்களுடன் கலந்து கூட்டங்களை நடத்தி, அந்த ஸ்தாபனங்களிடமே திரும்பிச் செல்கின்றனர். அவர்களுக்கு அதிக புகழ், வானொலி, செய்தித்தாளில் பெரிய பெயர். எல்லோருமே அவர்களைக் குறித்து புகழ்ச்சியாய் பேசுகின்றனர். 119. ஆனால் நான் வார்த்தைக்கு உண்மையாயிருந்து, வார்த்தையில் உண்மையாய் நிலைத்திருந்த காரணத்தால், எல்லோரும் என்னை கைவிட்டு பிரிந்து போனார்கள். அவர் எனக்கு அளித்த கட்டளைக்கு நான் உண்மையாயிருந்து, ஸ்தாபன தத்துவத்தைப் பிரசங்கிக்காமல், திருவசனத்தைப் பிரசங்கித்தேன். திருவசனத்தைப் பிரசங்கி, வார்த்தையில் நிலைத்திரு" என்பதே எனக்களிக்கப்பட்ட கட்டளை. இதை ஒலிநாடாவில் கேட்கும் என் சகோதரரே, நான் உங்களிடம் வந்து வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்தி, தரிசனங்களைக் குறித்து பேசி, காரியங்களைக் காண்பித்த போது, நான் பெரிய வனாயிருந்தேன். ஆனால் வார்த்தையைக் குறித்த சத்தியத்தை உங்களுக்கு நான் எடுத்துரைக்க முற்பட்ட போது, எதற்காக நீங்கள் எனக்கு முதுகு காட்டினீர்கள்? வேதம் கூறயதை அது நிறைவேற்றுவதாய் உள்ளதென்று நீங்கள் உணருகிறீர்களா? ஆம், அப்படித்தான் அது செய்கிறது. இப்பொழுது என்னால் எந்த இடத்துக்கும் போக முடிகிறதில்லை. 120. கடிதங்கள் எந்நேரமும் வந்த வண்ணமாக இருக் கின்றன. அன்றொரு நாள் வந்த கடிதத்தில், "சகோ. பிரான்ஹாமே, உங்கள் மேல் நான் அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் நான் சேர்ந்திருக்கும் ஸ்தாபனம் பின்மாற்றமடைந்து கொண்டு வருகிறதென்று நீங்கள் கூறக் கேட்டேன். அன்று முதல் உங்கள் மேல் நான் கொண்டிருந்த நம்பிக்கை அறவே அற்றுப்போனது. என் ஸ்தாபனத்தை சேர்ந்த இருபத்தைந்து சகோதரர் உங்கள் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். நீர் சொன்னதைக் கேட்ட மாத்திரத்தில் நாங்கள் எழுந்து போய் விட்டோம்" என்று எழுதப்பட்டிருந்தது. 121. நல்லது. எல்லோருமே என்னைக் கைவிட்டுப் பிரிந்து போயினர். ஆனால் ஒரு காரியம், அவர் என்னுடன் நின்றார். நதியில் எனக்குக் கிடைக்கப் பெற்ற பரம தரிசனத்துக்கு நான் கீழ்படியாதவனாய் இருக்கவில்லை. அதற்கு நான் உண்மையாய் இருந்து வந்திருக்கிறேன். அவர் எனக்கு உண்மையாய் இருந்து வந்திருக்கிறார். என்றாவது ஒரு நாள் - எப்பொழுது என்று எனக்குத் தெரியாது - அவர் என் ஊழியத்தை முடிசூட்டுவார் என்று நான் அவர் பேரில் நம்பிக்கையாயிருக்கிறேன். என்னால் முடிந்த வரைக்கும் நான் உண்மையாய் நிலைத்திருப்பேன். - அது எப்படி இருக்கும் என்றோ, எப்பொழுது நடக்குமென்றோ எனக்குத் தெரியாது. நான்... அவர் ஆயத்தமாகும்போது நானும் ஆயத்தமா யிருப்பேன். இங்கு பாருங்கள். நான் தேவனுடைய வார்த்தை என்னும் வஸ்திரத்தை எடுத்து, அவருடைய மணவாட்டியை அந்த வார்த்தை என்னும் வஸ்தி ரத்தைக் கொண்டு, அவருடைய நீதியினிமித்தம் அவளை உடுத்துவிப்பதன் மூலம் அவர் என் ஊழியத்தை முடி சூட்டுவார் என்று நம்புகிறேன். அவர் எனக்கு முடி சூட்டி, அந்த நாளில் நான் நின்று கொண்டு, இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி' என்று கூறும்படி செய்வார் என்று நம்புகிறேன். 122. மேலே ஏறிச் செல்ல எத்தனையோ மலைகள் உள்ளன. ஏறுகிற பிரயாசம், சில சமயங்களில் கடினமாகி விடுகிறது. ஆனால் பாதையை சுட்டிக் காட்டுபவர் எது சிறந்தது என்பதை அறிந்திருக்கிறார். "வழியின் முடிவை நாம் அடையும்போது, வழியில் பட்ட கஷ்டங்கள் ஒன்றுமில்லை என்று தோன்றும். அந்த இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகளை நாம் தேடிக் கண்டு பிடிப்போம். நண்பர்களே, இதை ஞாபகம் கொள்ளுங்கள் : "கலிலேயா கடலோரத்தில் நடந்த அந்நியரின் அடிச்சுவடுகளினால் அங்கிருந்த மணல் கழுவப் பட்டது. கொந்தளித்த அலைகளை அமரிக்கையாக்கின அந்த சத்தம் இனி ஒருபோதும் யூதேயாவில் கேட்கப்படுவதில்லை. ஆனால் தனிமையான அந்த கலிலேயரின் பாதையை இன்று நான் அடையும் போது, வழியில் பட்ட கஷ்டங்கள் ஒன்றுமில்லை என்று தோன்றும்.' 123. அவர் இந்த வேதபாகத்தின் முதல் பாகத்தை எனக்கு அளித்த போது, நான் ஒரு இளைஞனாக, நேரான தோளையும் வெளியே தள்ளின மார்பையும், அலைகள் போல் வளர்ந்திருந்த கறுத்த தலைமயிரை உடையவனாகவும் அங்கு நின்று கொண்டிருந்தேன். இப்பொழுதோ நான் தோள் தொங்கினவனாய், வழுக்கை தலையுடையவனாய், தலை நரைத்த வனாய், ஐம்பத்து முன்று வயதான வயோதிபனாய் நின்று கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் நாட்கள் செல்ல அதிக இனியவராய் இருக்கிறார். நான் ஒன்றையும் மறைத்து வைக்காமல் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் முழுவதையும் உங்களுக்கு அறிவித்தேன். என் இருதயத்தின் வாஞ்சை என்னவெனில், அவர் எந்த சபைக்காக மரித்தாரோ, அந்த சபை அவருடைய சொந்த இரத்தத்தின் நீதியின் வஸ்திரத் தாலும், அவருடைய வார்த்தையினாலும், அவருடைய வார்த்தையின் நீதியினாலும் தரிப்பிக்கப்பட்டதாய் அதை சந்திக்க வேண்டும் என்பதே. ஏனெனில் அவருடைய வார்த்தை ஒருபோதும் தவறாது. நான் வார்த்தையில் நின்று, வார்ததைக்கு உண்மையாயிருந்து, வார்த்தை என்னிலும் நான் அவரிலும் நிலைத்திருந்தால், நான் உண்மையாயிருந்த தற்காக அந்த நாளில் களிகூருவேன் என்று அறிந்தி ருக்கிறேன். 124. வருங்காலம் என்ன வைத்துள்ளது என்று எனக்குத் தெரியாது, ஆனால் நாம் எங்குள்ளோம் என்று காண்கிறீர்கள் அல்லவா? எல்லோருமே - என் சொந்த கூட்டாளிகளும் கூட, "சகோ. பிரான்ஹாம் முடிந்து விட்டார். பாருங்கள்? ஆம். "எல்லாம் தீர்ந்து விட்டது" பாருங்கள்? 'அவரைக் குறித்து அதிகம் இப்பொழுது கேள்விப்படுவதில்லை" என்கின்றனர். பாருங்கள்? அவர்கள்... அவர்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை, அவ்வளவுதான், புரிந்து கொள்ள முடியவில்லை, அவர்களால் காண முடியவில்லை. 125. நான் நினைக்கிறேன், பவுல், "நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது' என்று கூறினபோது அவன் விரும்பின மிகப் பெரிய காரியம் - பவுலின் இருதயத்தி லிருந்த மிகப் பெரிய வாஞ்சை இரத்தசாட்சியாக மரிக்க வேண்டும் என்பதே. அக்காலத்திலிருந்த அனைவரின் இருத யங்களிலும் குடி கொண்டிருந்த வாஞ்சை அதுவே. அவர்கள் ....நீங்கள் எப்பொழுதாவது ஃபாக்ஸ் எழுதிய இரத்தசாட்சி களின் புத்தகம், நிசாயா ஆலோசனை சங்கம் புத்தகம் இவைகளைப் படித்திருக்கிறீர்களா? அவர்களுக்குக் கிடைக்கப் பெற்ற மிகப் பெரிய கனம் (பாலிகார்ப்புக்கும் மற்றவர்களுக்கும்); அவர்கள் இரத்த சாட்சிகளாய் மரிக்கப் போகிறார்கள் என்று அறிந்தவர்களாய் ஆனந்தக் களிப்புடன் சிங்கங்களின் கெபிக்குள் நடந்து சென்றனர். அவர்கள் தொழுமரத்தில் கட்டப்பட்டு சுட்டெரிக்கப்பட்ட போது, அவர்கள் இரத்த சாட்சிகளாக மரிக்கும் கனத்தைப் பெற்ற தால், ஆனந்த சத்தமிட்டனர். பவுல், அவன் வைக்கப் பட்டிருந்த இருளடைந்த, பாழடைந்த, சுவற்றில் ஓட்டை விழுந்த சிறையிலிருந்து தலைவெட்டப்பட கொண்டு செல்லப் பட்ட போது; அந்த இடத்துக்கு நான் சென்று பார்த்திருக் கிறேன். அதற்கு பின்னால் ஒரு ஆறு ஓடுகின்றது, அதில் தான் அவன் உடலைத் தூக்கி எறிந்தனர். இப்பொழுது அவர்கள் அவனைப் பரிசுத்தவானாகச் செய்துள்ளனர். அதே குழுவினர்! அவன் அந்த இடத்துக்கு நடந்து சென்று, "ஓ , மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஒட்டத்தை முடித்தேன், இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது- எனக்கு மாத்திர மல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும்" என்றான் (1 கொரி. 15: 55, 57; 1 தீமோ . 4: 7,8). 126. இப்பொழுது நாம் 6ம் வசனத்திலிருந்து 18ம் வசனம் வரைக்கும் வந்து விட்டோம். எனக்கு இந்த வசனங்கள் எப்படி பொருத்தம் என்று தெரியாது, மற்றவர் களுக்கு என்ன நேரிட்டது என்பதை நான் படித்துக் காண்பித்தேன். அவரைப் பற்றி கூறி முடிக்கும் வரைக்கும் நான் தொடர்ந்து வார்த்தையில் உண்மையாய் நிலைத்திருக்கப் போகிறேன். அங்கு தான் இன்றைய ஊழியம் உள்ளது. நான் கழுவப்பட்டு தீர்ந்து விடவில்லை. நான் ராஜாவுக்குள் கழுவி ஊற்றப்பட்டிருக்கிறேன் என்று நம்புகிறேன். அது உண்மை. இப்பொழுது நாம் தலைவணங்கி ஜெபிப்போம். 127. இன்றிரவு ஒரு சிறு கயிறு சிங்காசனத்திலிருந்து கீழே இறக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜீவ கயிறு (lifeline) என்று பெயர். நான் ஜெபிக்கும் போது, இங்குள்ள மனமாற்ற மடையாத ஒவ்வொரு நபரையும் அது இழுத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன். பாவி நண்பனே, உன் கையை நீட்டி அதைப் பிடித்துக் கொள்ள மாட்டாயா? நீங்கள், சகோ. பிரான்ஹாமே, உங்களுக்கு வயதாகி விட்டது என்று கூறினீர்களே. ஆகையால் தான்...' எனலாம். இல்லை, சகோதரனே, சகோதரியே, நான் சிறு பையனாயிருந்த போதே இதை விசுவாசித்தேன். அதற்காக என் ஜீவனையும் கொடுப் பேன். எனக்குள்ள ஒரே வருத்தம் என்னவெனில், எனக்குக் கொடுக்க ஒரு ஜீவன் மாத்திரமே உள்ளதே என்று. எனக்குப் பத்தாயிரம் ஜீவன்கள் இருக்க நேர்ந்தால், அவை அனைத்தையும் அவருக்குக் கொடுத்து விடுவேன். 128. அந்த கயிறு இன்றிரவு உங்கள் வழியாக கடந்து வரும்போது, அதைப் பிடித்துக் கொள்ள மாட்டீர்களா? நீங்கள், அதைப் பிடித்துக் கொள்ள நான் பாத்திரன் அல்ல" எனலாம். பிள்ளையே நீ பாத்திரன் அல்ல என்று அறிவேன். நீ பாத்திரமான ஒன்றைச் செய்து விட்டு, நீ என்ன செய்தாய் என்று என்னிடம் சொல். நானும் அதை செய்கிறேன். நீ பாத்திரனாவதற்கு செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை. நீ அபாத்திரனாகவே பிறந்தாய். நீ செய்யக் கூடிய ஒன்றே ஒன்று, தேவன் உனக்கு வகுத்துள்ள வழியை இறுகப் பற்றிக் கொள்வதே. நீ மூழ்கிக் கொண்டிருக்கிறாய், அதில் மூழ்கி விடாதே. தேவன் ஜீவ கயிற்றை உன்னிடம் எறிந்திருக்கிறார். இன்றிரவு நாம் கையை நீட்டி அதைப் பிடித்துக் கொள்வோம். 129. எங்கள் பரலோகப் பிதாவே, இதே பீடத்தில், இதே இடத்தில், இந்த நிலத்தில் நான் சபையை அன்று காலை பிரதிஷ்டை செய்தது என் நினைவுக்கு வருகிறது. அதைக் குறித்து நான் இப்பொழுது பேசினேன். அந்த மூலைக்கல், வேதத்திலிருந்து ஒரு பக்கத்தை எடுத்து நான் எழுதியதைக் கொண்டதாய் இப்பொழுதும் உள்ளது. நான், 'கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய கிருபையினால் வார்த்தையில் உண்மையாய் நிலைத்திருப்பேன்" என்று அதில் எழுதினேன். மற்ற காலங்களில் அது என்ன அளித்ததோ அதையே இப்பொழுதும் அளித்துள்ளதை நான் கண்ணாரக் காண் கிறேன். நான் உலகம் முழுவதும் பிரயாணம் செய்து திரும்ப வந்து, இன்றிரவு இந்த கூடாரத்தில் இருக்கிறேன். அந்த சிறு மூலைக்கல் இப்பொழுதும் அங்குள்ளது. அந்த தாளும் அதில் உள்ளது. கர்த்தாவே, என்னை ஆராய்ந்து பாரும். நான் அநேக தவறுகளைச் செய்திருக்கிறேன். கர்த்தாவே, நான் தவறு செய்திருக்கிறேன். அநேக முறை நான் உமக்கு தவறிழைத்திருக்கிறேன். சற்று முன்பு கூட நான் செய்த ஒரு தவறை எடுத்துரைத்தேன். தேவனே, நான் எவ்வளவு வேகமாக தவறு செய்கிறேனோ, அவ்வளவு வேகமாக மன்னிப்பைக் கோருகிறேன். என் இருதயத்தில் உம்மை நான் நேசிக்கிறேன். நாங்கள் செல்லவிருக்கும் அந்த இடத்தை அண்மையில் எனக்குக் காண்பித்தீர். கர்த்தாவே, என்றைக்கு என் வாழ்க்கையை முடிக்கப் போகிறீர் என்று நான் அறியேன். இன்றிரவு உமது கிருபையால் இங்கிருக் கிறேன். எப்பொழுது முடிப்பீர் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அந்த நேரம் வர வேண்டும். அந்த நேரம் வரும் போது, நான் கோழையாயிருக்க விரும்பவில்லை. மற்றவர்கள் நின்றது போல, நானும் தைரியமாக நிற்க விரும்புகிறேன். தேவனே, என் சாட்சியை என் சொந்த ஜீவனைக் கொண்டு முத்தரிக்க வேண்டுமென்றால், அல்லது என்ன நேர்ந்தாலும், கர்த்தாவே, அப்பொழுது அதை முடிசூட்டுவீராக. என்னை முடிசூட்டவேண்டாம், கர்த்தாவே, நான் பிரசங்கித்த அந்த ஊழியத்தை முடிசூட்டுவீராக. அது உம்முடைய வார்த்தை . உயிர்த்தெழுதலின் போது அந்த வார்த்தை என்னை உயிரோ டெழுப்ப வல்லது என்று அறிந்திருக்கிறேன். நான் பிரசங்கித்த வார்த்தையைக் குறித்து நான் வெட்கப்படேன். ஏனெனில் அதை விசுவாசிக்கிற அனைவருக்கும் அது இரட்சிப்புக்கேற்ற தேவ பெலனாயுள்ளது. 130. இன்று வரைக்கும் நின்று கொண்டிருக்கிற இந்த சிறு சபைக்காக உமக்கு நன்றி சொல்லுகிறேன். தீர்க்க தரிசிகள் - இன்னும் ஆறே மாதங்களில் இது வாகனம் பழுது பார்க்கும் கொட்டகையாகி விடும்” என்று தீர்க்கதரிசனம் உரைத்த போதிலும், நான் வார்த்தையில் உறுதியான நிலையை மேற்கொண்டேன். முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன, இன்றைக்கு அது முன்பிருந்த ஆண்டுகளில் இருந்ததைவிட அதிக அனல் கொண்டிருக்கிறது. இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். எங்கள் போதகருக்காக உமக்கு நன்றி சொல்லுகிறோம். டீகன் மார்களுக்காகவும், தர்மகர்த்தாக் களுக்காகவும் உமக்கு நன்றி சொல்லுகிறோம். கர்த்தாவே, எங்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் வகிக்க வேண்டிய சிறு பாகம் ஒன்றுண்டு. அதை விசுவாசத்துடன் வகிக்க விரும்பு கிறோம், அதை சரியாக வகிக்க விரும்புகிறோம். 131. இன்றிரவு எங்களுடன் சேர்ந்து கொள்ள விருப்ப முள்ள சிலர் இங்கிருக்கக் கூடும். அவர்கள் எங்களைச் சேர்ந்து கொள்ளும் வழி, அந்த ஜீவ கயிற்றை இழுத்து, தங்கள் மணிக்கட்டில் அதை சுற்றிக் கொண்டு, தங்கள் இருதயத்தில் அதைக் கட்டிக் கொண்டு, "கர்த்தாவே, என்னை இழுத்துக் கொள்ளும், என்னை உயரே தூக்கும்" என்று கூறுவதே . அப்பொழுது அவர்கள் பொன்னைப் போல் பிரகா சிப்பார்கள். கர்த்தாவே, இதை அருளும். அந்த நேரத்துக்க காக நாங்கள் காத்திருக்கிறோம். 132. அது முடிவுக்கு வந்திருக்கிறதென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இங்கு நாங்கள் போதித்துக் கொண்டு வந்த வண்ணமாக, இப்பொழுது லவோதிக்கேயா சபை காலம் நடந்து கொண்டிருக்கிறது. கர்த்தருடைய வருகை யைத் தவிர நடக்க வேண்டியது வேறொன்றுமில்லை என்று நாங்கள் காண்கிறோம். கிரீடமாகிய அவரே வருவதைக் காண் பது, வார்த்தைக்கு. மிகப் பெரிய முடிசூடுதலாக இருக்கு மல்லவா? இங்கு நான் நின்று கொண்டு, "அதோ அவர், அவர்தான் ஆட்டுக்குட்டி" என்று சொல்ல விரும்புகிறேன். யோவான் சொன்னது போல், நானும் -இதோ நாம் காத்திருந்த ஆட்டுக்குட்டி. இது தான் அவர்" என்று சொல்ல விரும்புகிறேன். அப்பொழுது கர்த்தர் தமது ஆலயத்துக்குத் தீவிரமாய் வந்து தமது ஜனங்களை எடுத்துக்கொள்ளப் படுதலில் கொண்டு செல்வார். 133. பிதாவே, எங்களை ஆயத்தப்படுத்தும். உமது இரத் தத்தினால் எங்கள் இருதயங்களைக் கழுவும். உமது வார்த்தை எங்களில் நிலைத்திருக்க, எங்களை தூய்மையும் சுத்தமுமாக்கும். வார்த்தை இறுகப் பற்றிக் கொண்டு பலனையளிக்க, நாங்கள் வார்த்தையின்படி நடக்க வேண்டும் என்பதை நினைவுகூரு வோமாக. ஒவ்வொரு பாவிக்கும் மனந்திரும்புதலை அருளு வீராக. இங்குள்ள ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். கர்த்தாவே, பரிசுத்தவான்கள், முன் காலத்து விலையேறப் பெற்ற போர்வீரர்கள், கர்த்தாவே, பல ஆண்டுகளாக போர்க்களத்தில் போர் புரிந்து, கேலி செய்யப்பட்டு, இழி வாகப் பேசப்பட்டு, இகழப்பட்டு வந்திருக்கின்றனர். அவர்களுக்கு ஜீவன் இருப்பதனால் அவர்கள் இன்னும் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் விசுவாசித்தி ருக்கிறவர் இன்னார் என்று அறிந்திருக்கின்றனர். அவரிடத் தில் ஒப்புவித்ததை அவர் காத்துக் கொள்ள - வல்லவரா யிருக்கிறார் என்று அவர்கள் நிச்சயித்திருக்கின்றனர். அதற்காக உமக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். எங்கள் மத்தியிலுள்ள வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்த வேண்டு மென்று வேண்டிக் கொள்கிறோம். எங்கள் பாவங்கள், வியா திகள் அனைத்தும் போக்கியருளும். பிதாவாகிய தேவனே, நீரே மகிமையை எடுத்துக்கொள்ளும். 134. கர்த்தாவே, எனக்கு அநேக விலையேறப் பெற்ற நண்பர்கள் உள்ளனர். அவர்களை நான் நேசிக்கிறேன். காலாகாலங்களில் மரித்துப் போனவர்களையும் நான் அறிந்தி ருக்கிறேன். விலையேறப்பெற்ற நண்பர்கள், அன்புள்ள நண்பர்கள், வாலிபர், வயோதிபர் இவர்களை இதயப்பூர்வமாக நாங்கள் நேசிக்கிறோம். கர்த்தாவே , எங்களை உண்மையுள்ள வர்களாக - வார்த்தைக்கு உண்மையுள்ளவர்களாக்கும். அப்பொழுது நாங்கள் என்றாவது ஒரு நாள் அந்த சிறப்பான தேசத்தில் அவர்களைச் சந்திப்போம். அங்கு துயரமோ கவலையோ எதுவும் இராது. கர்த்தராகிய இயேசுவின் வருகையை நாங்கள் விரைவில் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறோம். அவர் வருவாரென்று நாங்கள் விசுவா சிக்கிறோம். 135. கர்த்தாவே, இன்றிரவு அவிசுவாசியை ஆசீர் வதியும். அவன் விசுவாசியாக மாறி இன்றிரவு உம்மை இரட்சகராக ஏற்றுக் கொள்வானாக. 136. நாம் தலைவணங்கியிருக்கும் போது தலைவணங்கி யுள்ள யாராகிலும், "சகோ. பிரான்ஹாமே, நல்ல போராட் டத்தைப் போராடி வாழ்க்கை பாதையின் முடிவை அடைய வேண்டுமென்று என் இருதயத்தின் ஆழத்தில் ஆவல் குடி கொண்டுள்ளது. நான் கிறிஸ்தவனாயிருக்க விரும்புகிறேன். என் கையை உயர்த்தப் போகிறேன்" என்று சொல்ல விரும்பு கிறீர்களா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னையும். "நல்ல போராட்டத்தைப் போராடி, என் வாழ்க்கை பாதையின் முடிவை அடைய விரும்புகிறேன். இப்பொழுது நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறேன். அவர் எனக்கு ஒத்தாசை செய்ய வேண்டு மென்று விரும்புகிறேன். சரி, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப் பாராக. அது நல்லது. அவர் உன்னை அறிந்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக அவரைக் குறித்து நான் போதிய அளவு கற்றுக் கொண்டிருக்கிறேன். முப்பத்து இரண்டு ஆண்டுகளாக பிரசங்க பீடத்தில் நான் நின்று கொண்டு, நீங்கள் செய்யும் ஒவ்வொரு அசைவையும் அவர் அறிந்தி ருக்கிறார் என்று, அவரைக் குறித்து போதிய அளவு கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர் அடைக்கலான் குருவியை கவனித்துக் கொள்கிறார். உங்கள் தலையில் உள்ள மயிரெல் லாம் எண்ணப்பட்டிருக்கிறது. பாருங்கள், அதைக் குறித்து எல்லாம் அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் உண்மையான அர்த்தத்தில் கையையுர்த்துங்கள். நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம் அது ஒன்று தான். தண்ணீர் அங்கு ஆயத்த மாயுள்ளது. 137. இதை ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசித்து, அதன் பிறகு ஞானஸ்நானம் பெறுங்கள். எதற்காக? உங்கள் பாவமன்னிப்புக்காக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீங்கள் என்னவாகி விட்டீர்கள் என்பதற்கு அது உங்கள் சாட்சி. நீங்கள் ஞானஸ்நானம் பெறும்போது, உங்கள் பாவங்கள் போய் விடுகின்றன. அவைகளை நீங்கள் அறிக்கை செய்து அவை மன்னிக்கப்பட்டன என்று விசுவாசிக்கிறீர்கள். அந்த . ஜீவ கயிறு உங்கள் இருதயத்தை இழுத்து, "யாத்திரீ கனே, இந்த வழியாக வா. என்னுடன் பிரயாணம் செய். என் சிலுவையை உன் மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக் கிறேன். என் சுமை இலகுவாய் இருக்கிறது' (மத். 11 : 29-30) என்று கூறும்போது, அதை பிடித்துக் கொள்ள மாட்டீர்களா? உங்கள் கையை நீட்டி அதை பிடித்துக் கொள்ளுங்கள். 138. நீங்கள் நீண்ட காலம் முன்பு தொடங்கி, வழியில் சென்று கொண்டிருப்பதற்காக, எத்தனை கிறிஸ்தவர்கள் இன்றிரவு சந்தோஷமாயிருக்கிறீர்கள்? நீங்கள் தொடங்கி, முடிவை நோக்கி பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஊழியம் எதுவானாலும், தேவன் அதை முடிசூட்ட வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அது ஒருக்கால் இல்லாள் ஆக இருக்கலாம். தேவன் உன் ஊழியத்தை முடிசூட்ட வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அது ஒருக்கால் பிரசங்கி யாக இருக்கலாம். அது ஒருக்கால் டீகனாக இருக்கலாம், அது ஒருக்கால் சாதாரண அங்கத்தினனாக இருக்கலாம், அது ஒருக்கால் பண்ணையாளனாக இருக்கலாம். அது என்னவென்று எனக்குத் தெரியாது. அது என்னவானாலும் தேவன் உங்கள் வாழ்க்கையை அவருடைய இரண்டாம் வருகையின் போது, அவருடைய வார்த்தையின் மகிமையினால் முடிசூட்டி, உங்களை எடுத்துக் கொள்ளப்படுதலில் வேறொரு தேசத்துக்கு கொண்டு சென்று, அந்த சிறு மீனைக் குறித்து நான் கூறினது போன்று, நீங்கள் அந்தகாரத்தினின்று வெளி வருவீர்களாக. பாருங்கள், இந்த சரீரத்தை உடையவர்களாய் நீங்கள் மேலே செல்ல முடியாது. இந்த விண்வெளி வீரர்கள் செல்வது போல நீங்கள் செல்ல முடியாது. பாருங்கள், நீங்கள் அழுத்தம் கொண்ட ஒரு உறையில் இருக்க வேண்டும். அதற்கென நீங்கள் அழுத்தத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் தேவன் உங்கள் சரீரங்களை மாற்றும்போது, நீங்கள் அழுத்தம் பெற்று, எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்கிறீர் கள். நீங்கள் ..-- சிலுவையின் மகிமையான வழியில் சென்று கொண்டிருப்பீர்களானால், இந்த பழைய பூமிக்குரிய புலன்கள் இழக்கப்பட்டு, நீங்கள் இயேசுவுடன் கூட வீடு செல்வீர்கள். 139. இப்பொழுதும், பிதாவாகிய தேவனே, கிறிஸ்தவர்களாவதற்கென இந்த கரங்கள் உயர்த்தப்பட்டதற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அவர்கள் இருதயத்தில் உணர்ந்து அப்படி செய்தார்கள் என்று நான் விசுவா சிக்கிறேன். அவர்கள் எந்நேரமும் தவறாமல் இருக்க, அவர் களுக்காக ஜெபிக்கிறேன். அவர்கள் அவ்வாறு தவற நேர்ந்தால், பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவரை விரைவில் பெறுவார்களாக. பிதாவே , அது மிகப் பெரிய காரியம் என்று நான் அறிந்திருக்கிறேன். நான் என் தவறுகளைச் செய்யும போது, பிதாவினிடத்தில் எனக்காக (விரைவாக) பரிந்து பேசும் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்று அறிந்தி ருக்கிறேன். அப்பொழுது நான் கிரு பக்குள் திரும்பக் கொண்டு வரப்படுகிறேன். கர்த்தரின் அன்பான கரம் அதை துடைத்து விடுகிறது. இரத்தம் தோய்ந்த பலி அங்கு கிடத்தப் பட்டிருக்கிறது. அது என் இரட்சகர் என்று நான் அறிக்கை செய்கிறேன். 140. கர்த்தாவே, வியாதியாயுள்ள, தேவையுள்ள அனை வருக்கும் அவர்களுடைய தேவைகளை அருளிச் செய்து, எல்லா வியாதிகளையும் சுகப்படுத்த வேண்டுமென்று ஜெபிக் கிறேன். இங்கு பரிசுத்த ஆவியின் மகிமையான அபிஷே கத்தின் கீழ் உட்கார்ந்திருக்கும் நாங்கள், அது எங்கள் ஆத்து மாக்களுக்குள் இனிமையாக ஊற்றப்படுகிறதை உணரு கிறோம். 141. பிதாவாகிய தேவனே, அன்றொரு நாள் கனடாவி லிருந்து நான் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, என்ன நினைத்து வந்தேன் என்பதை நீர் அறிந்திருக்கிறீர். நான், "ஓ, பழமை நாகரீகமான ஒரு எழுப்புதலை மறுபடியும் பெற்று, பரிசுத்தவான்கள் பாடுவதைக் கேட்கவும், தேவனுடைய வல்லமை விழுவதைக் காணவும் எவ்வளவாக ஆவல் கொண்டிருக்கிறேன் என்று எண்ணினேன். ஒ, கர்த்தாவே, என் இருதயம் அதற்காக எவ்வளவாக ஆவல் கொண் டுள்ளது! இந்த கூடாரத்தில் அப்படிப்பட்ட ஒரு எழுப்புதல் உண்டாகி, ஓ, தேவனுடைய வல்லமை கிருபையின் ஆறுகளாக கீழே ஊற்றப்பட் ஒவ்வொரு இருதயத்துக்குள்ளும் செல்வ தாக. 142. கர்த்தாவே, இந்த சிறு இடத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இதை இதே விதமாக வைத்திருக்க எங்களால் முடியாது. உமது கிருபையே இதை ஆவிக்குரிய தாக வைத்து வந்துள்ளது. கர்த்தாவே, தேசத்திலேயே மிகவும் அதிகமான ஆவிக்குரிய சிறு இடம், எனக்குத் தெரிந்த வரைக்கும், இங்கு எய்த் அண்டு பென் தெருவில் உள்ளது என்று நான் இப்பொழுது விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, இதற்காக நான் உம்மை எவ்வளவாக துதிக்கிறேன்! கர்த்தாவே, சபைகளுக்கு சென்று, அங்குள்ளவர்கள் குளிர்ந்தவர்களாயும், சிரத்தையற்ற வர்களாயும்; ஸ்திரீகள் கன்னம் சிவக்கக் கூடாத அளவுக்கு அவ்வளவு தைரிய சாலிகளாய்; ஆமென்' என்று கூறாமல், கன்னங்களில் கண்ணீர் வடியாமல், இரட்சிப்பு எதையும் பெறாமல், வெறுமனே சபையை சேர்ந்து கொண்டு, தங்கள் கோட் 'பாடுகளை உச்சரிப்பதை கண்டு விட்டு, ஒ தேவனே இனிமையும் அனலுமான இந்த சிறு இடத்துக்கு வந்து, ஒவ்வொரு இருதயமாகிய பலிபீடத்திலும் அக்கினி எரிந்து கொண்டிருப்பதைக் காணும் போது, பிதாவே, அது எவ்வளவு ஆறுதலாக உள்ளது! எவ்வளவு ஆறுதல்! பிதாவே, உமக்கு நன்றி. கர்த்தராகிய இயேசுவின் வருகை மட்டும் அது அவ்வாறே நிலைத்திருப்பதாக. எங்கள் அனைவரையும் இப்பொழுது ஒருமித்து ஆசீர்வதியும். 143. நாளை ஓய்வு நாள். கர்த்தாவே, கீழ்நோக்கி எண்ணுதல்' (countdown) என்னும் செய்தியை பிரசங்கிப்பது நாளை காலை என்மேல் விழுந்த கடமையாயிருக்குமானால், எனக்குதவி செய்வீராக. தேவனே, ஜனங்கள் புரிந்து கொள்வ தற்கு ஏற்றவாறு அதை பிரசங்கிக்க அருள் செய்வீராக. இவர்கள் ஊழியத்தின் நிலையையும், அது எங்குள்ளதென்றும், நாம் எதற்காக காத்திருக்கிறோமென்றும், எல்லாமே ஏன் இவ்வாறு நடந்து வருகிறதென்றும் அறிந்து கொள்வார் களாக. அவர்கள் 5ம் வசனத்திலிருந்து படித்து, நாம் அடைந்துள்ள இடத்தை உணர்ந்து கொள்வார்களாக. 144. இப்பொழுதும் பிதாவே , எங்களை ஆசீர்வதித்து, எங்கள் சரீரங்களுக்கு நல்ல இளைப்பாறுதலை கட்டளையிட்டு, எங்களை நாளை திரும்பவும் கொண்டு வரவேண்டுமென்று ஜெபிக்கிறோம். சுவர்களைச் சுற்றி நின்று கொண்டு, ஒரு கால் மாற்றி ஒரு காலில் நின்ற இவர்கள் அனைவரையும் ஆசீர் வதியும். பெண்களும் ஆண்களும் மழையில் வெளியே நின்று கொண்டும், சன்னல்களின் அருகே நின்று கொண்டும். கார்களில் உட்கார்ந்து கொண்டும் இருந்தனர். ஒ, இவர்களை ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன், கர்த்தாவே. அவர்களுடைய இருதயத்தில் தேவனுடைய கிருபை பெற்றவர்களாய் அவர்கள் வீடு திரும்புவார்களாக, இயேசுவின் நாமத்தில் ஜெபிக் கிறேன். ஆமென். 145. உங்களுக்கு இப்பொழுது விளங்குகிறதா? இன்றிரவு நீங்கள் படுக்கைக்கு போகும் முன்னே, கூடுமானால் முதலில் 2 தீமோத்தேயு 2 : 4ஐயும் பிறகு 2 தீமோத்தேயு 4 : 5ம் வசனம் தொடங்கி வாசியுங்கள். அப்பொழுது நாம் எங்குள்ளோம் என்பதை அறிந்து கொள்வீர்கள். பவுலை ஏன் ஜனங்கள் பிரிந்து சென்றனர்? அவன் ஏன் .... அந்த ஊழியத்தை , இப்பொழுது நாம் கடந்து சென்று கொண்டிருப்பதுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பரி. பவுலின் போதனைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். நான் கண்ட அந்த பரம தரிசனத்தை நினைவு கூருங்கள். நான், "பவுல் . அவன் ஜனங்களுக்காக நிற்க வேண்டுமா? என்று கேட்டேன். அவர்கள், "ஆம்" என்றனர். 146. நான், பவுல் பிரசங்கித்த அதே வார்த்தையை நான் பிரசங்கித்தேன், அதே சுவிசேஷத்தில் நான் நிலைத்து நின்றேன்" என்றேன். 147. அப்பொழுது லட்சக்கணக்கானவர்கள் தங்கள் கைகளை உயர்த்தி, அதன் பேரில் தான் நாங்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்” என்றனர். 148. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? "நாம் சந்திக்கும் வரைக்கும்! நாம் சந்திக்கும் வரைக்கும்! நாம் சந்திக்கும் வரைக்கும்!"